திமுக - இந்திய கம்யூனிஸ்ட் கூட்டணி உடன்பாடு! 2 தொகுதிகள் ஒதுக்கினார் ஸ்டாலின்!

திமுக கூட்டணியில் இந்திய கம்யுனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.


கடந்த 2 வாரங்களாக நடைபெற்று வந்த பேச்சுவார்த்தையில் இன்று உடன்பாடு ஏற்பட்டது. அதன் படி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகளை ஒதுக்கி ஸ்டாலின் உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளார்.

சென்னையில் மு.க.ஸ்டாலின் - முத்தரசன் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இந்த உடன்படிக்கை கையெழுத்தானது. எந்த தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் போட்டி என்பது பிறகு அறிவிக்கப்படும்.

ஏற்கனவே கடந்த 2004ம் ஆண்டு தேர்தலில் சி.பி.ஐ திமுக கூட்டணியில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டது. தற்போது மீண்டும் 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அதன் படி நாகை, திருப்பூர் ஆகிய தொகுதிகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.