திமுகவுக்கு சேலம்! ஆரணியில் காங்,! திருமாவுக்கு சிதம்பரம்! 40 தொகுதி‌ பட்டியல்!

திமுக கூட்டணியில் யார் யாருக்கு என்ன தொகுதி என இன்று காலை 11 மணிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிடுகிறார்.


தொகுதிகளின் பட்டியல் : 

திமுக 

- தென்சென்னை

- வடசென்னை

- மத்திய சென்னை

- காஞ்சிபுரம்

-  தென்காசி

- ஶ்ரீபெரம்பத்தூர்

- அரக்கோணம் 

- வேலூர்

-  சேலம்

- தருமபுரி

- திருவண்ணாமலை

- கடலூர்

- கள்ளக்குறிச்சி

- நீலகிரி

- பொள்ளாச்சி

- மயிலாடுதுறை

- தஞ்சாவூர்

- தூத்துக்குடி

- திண்டுக்கல்

- திருநெல்வேலி

காங்கிரஸ்

- கன்னியாகுமரி

- தேனி

- விருதுநகர்

- திருச்சி 

- ஆரணி

- கரூர்

- கிருஷ்ணகிரி

- சிவகங்கை

-  திருவள்ளூர்

- புதுச்சேரி

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம்

- ஈரோடு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

- நாகப்பட்டினம் 

- திருப்பூர்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 

- மதுரை

- கோவை

விடுதலை சிறுத்தைகள் 

- சிதம்பரம் 

- விழுப்புரம்

இந்திய யூனியன் முஸ்லீம் லீக்

- ராமநாதபுரம்

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி 

- நாமக்கல்

இந்நிய ஜனநாயக கட்சி 

- பெரம்பலூர்திமுக தலைவர் ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினர்கள் கே.என்.நேரு, பொன்முடி அண்ணா அறிவாலயம் வருகை

திமுக கூட்டணியில் விசிக, மதிமுக, இடதுசாரிகள், கொங்குநாடு மக்கள் கட்சி ஆகியவற்றுக்கான தொகுதி ஒதுக்கீடு கடந்த வாரமே இறுதி செய்யப்பட்டுவிட்டது. காங்கிரஸ் போட்டியிடும் தொகுதி குறித்து மட்டுமே இழுபறி நீடித்து வந்தது.

நேற்று காங்கிரஸ் கட்சியும் தங்களுக்கான 10 தொகுதிகளை இறுதி செய்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுவிட்டது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி இன்று யார் யாருக்கு என்னென்ன தொகுதிகள் என்று அறிவிப்பு வெளியாகும் என்றார்.

அதன்படி இன்று காலை அனைத்து கூட்டணி கட்சி தலைவர்கள் முன்னிலையில் ஸ்டாலின் யார் யாருக்கு என்னென்ன தொகுதிகள் என்கிற விவரத்தை வெளியிட உள்ளார். இதற்காக அண்ணா அறிவாலயத்தில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.