சொல்ல சொல்ல கேட்காம என் தங்கச்சியையா காதலிக்கிற..! நடுரோட்டில் வெட்டி கூறு போடப்பட்ட தேமுதிக பிரமுகர்!

காதல் விவகாரத்தில் தேமுதிக பிரமுகர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவமானது கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கடலூர் மாவட்டத்தில் குறிஞ்சிப்பாடி எனும் இடம் அமைந்துள்ளது. இதனருகே உள்ள வெங்கடாம்பேட்டையில் ஜனார்தனன் என்ற இளைஞர் வசித்து வந்துள்ளார். இவர் அந்தப் பகுதி இளைஞர் அணி செயலாளராகவும் பொறுப்பு வகித்துவந்தார்.

இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவரின் தங்கைக்கும் சில ஆண்டுகளுக்கு முன்னர் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. நெருக்கமானது நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் ஒன்றாக பல இடங்களுக்கு சுற்றி வந்தனர். இவர்களது காதல் விவகாரமானது ஆனந்த்ராஜ்க்கு தெரியவந்தது. அவர் பலமுறை ஜனார்தனனை கண்டித்திருந்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த ஆனந்தராஜ் தன்னுடைய நண்பர்களை அழைத்து ஜனார்த்தனனை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார். நேற்றிரவு ஜனார்த்தனன் வெளியூர் சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அவரை ஆனந்தராஜ் தன்னுடைய நண்பர்களுடன் இணைந்து வழிமறித்துள்ளார்.

தங்களிடம் இருந்த அரிவாளால் ஜனார்த்தனனை சரமாரியாக வெட்டியுள்ளனர். பொதுமக்கள் விரைந்து வருவதை கண்ட இவர்கள் ஓடிவிட்டனர். பொதுமக்கள் ஜனார்தனன் குறிஞ்சிப்பாடி மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் மேல்சிகிச்சைக்காக இவரை கடலூர் அரசு பொது மருத்துவமனைக்கு மாற்ற முடிவெடுத்தனர்.

ஆனால் துரதிஸ்டவசமாக செல்லும் வழியிலேயே ஜனார்தனன் இறந்துவிட்டார். சம்பவம் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவமானது குறிஞ்சிப்பாடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.