தேமுதிக எப்போதும் திமிராகத்தான் இருக்கும்! நானும் திமிராகத்தான் பேசுவேன்! கேப்டன் மகன் அட்ராசிட்டி!

என் தந்தையை தவறாக பேசியவர்களை பழி தீர்க்கவே கும்பகோணம் பொதுக்கூட்டத்தில் பேசியதாக விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.


பெரம்பலூர் மாவட்டத்தில் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று தே.மு.திக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் பேசினார். அப்போது, அவர் கூறியதாவது, தேமுதிக கூட்டணி குறித்து கட்சித் தலைமை இன்று அறிவிக்கும். தலைவர்  40  தொகுதிகளுக்கும் பிரச்சாரத்திற்கு வருவார்.  

தேமுதிக-விடம் கூட்டணி பேச வரும் அதிமுகவினரை விஜயபிரபாகர் தரக்குறைவாக  திமிராக பேசுவதாக விமர்சனம் செய்கின்றனர். தேமுதிக எப்பொழுதும் திமிராகத்தான் நடக்கும். என்றும் என்தந்தையை பற்றி தவறாக கிண்டல் பேசியவர்களை திருப்பி பேச எனக்கொரு வாய்ப்பு கிடைத்தது.

அதை பயன்படுத்தி கொண்டேன். தேமுதிக தலைமை தொண்டர்களை அடகு வைத்து ஆதாயம் தேடுவதாக விமர்சனம் செய்த திமுகவின் கொள்கை பரப்பு துணைச் செயலாளரும் தேமுதிக முன்னாள் எம்.எல்.ஏ-வுமான சந்திரகுமாரை பற்றி அவரிடம் கேட்கப்பட்டது.

அப்போது ஆவேசமான விஜயபிரபாகரன்,  மூன்றாண்டுக்கு முன் கட்சிக்கு துரோகம் செய்து வெளியில் சென்றவர் இன்று எலிப் பொறியில் இருந்து வெளியில் வந்து விமர்சிக்கிறார். திமுகவின் பொருளாளர் துரைமுருகன் மூலம் தேமுதிக சந்தித்த பிரச்சனை கட்சிக்கு திருஷ்டி கழித்தது போன்றது.

தங்களை யாராலும் அழிக்க முடியாது. கூட்டணி பேச வரும் அரசியல் தலைவர்களை விஜய பிரபாகர் தரக்குறைவாக திமிருடன் பேசுவதாக சென்னையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் எழுப்பிய கேள்விக்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் "இளங்கன்று பயமறியாது"  என்றார்.

மேலும் விஜயபிரபாகரன் பேசியதை அதிமுகவினரே கண்டுகொள்ளவில்லை நீங்கள் ஏன் ஆதங்கப்படுகிறீர்கள் என்று பதில் கேள்வி எழுப்பினார். இந்த நிலையில் விஜய்பிரபாகரன் மறுபடியும் அதே பாணியில் பேசியுள்ளார்.