உடல் நலக்குறைவு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று பின் முதல் முறையாக நாடாளுமன்ற தேர்தலுக்காக தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
ஸ்டாலினை போல் ஒரு துரோகி கிடையாது! தேர்தல் பிரச்சாரத்தில் சீறிய கேப்டன்!

மத்தியசென்னை நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் பா.ம.க சார்பில் போட்டியிடும் சாம்பல், வடசென்னையில் போட்டியிடும் அழகாபுரம் மோகன்ராஜ், பெரம்பூர் இடைத்தேர்தலில் போட்டியிடும் ராஜேஷ் ஆகியோரை ஆதரித்து தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வில்லிவாக்கம் பேருந்து நிலையம், பெரவல்லூர், மாதாவரம் மூலக்கடை,வியாசர்பாடி, பழைய வண்ணாரப்பேட்டை, காசிமேடு, தண்டையார்பேட்டை ஆகிய இடங்களில வாகனத்தில் அமர்ந்தபடியே பிரச்சாரம் செய்தார்.
அப்போது தொண்டர்களிடம் பேசிய அவர். அனைவரும் ராமதாஸ் ஐயாவின் சின்னம் மாம்பழ சின்னத்தில் அவர் கேட்டுகொண்டது போல ஓட்டு போடவும் நன்றி. பெரவல்லூர் பகுதியில் விஜய காந்த் பேசியபோது ஸ்டாலினை நம்பி யாரும் ஓட்டு போட்டுவிடாதீர்கள்.எடப்பாடி பழனிசாமியை குறை கூறி எப்படியாவது ஸ்டாலின் வந்துவிட பார்க்கிறார்..
கொட்டும் முரசுக்கு ஓட்டு போடுங்கள். மாதாவரம் மூலக்கடை பிரச்சாரத்தில் பொதுமக்களிடம் பேசிய அவர் அனைத்து கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கும் ஓட்டு போட்டுங்கள். இரட்டை இலை என்றால், இரட்டை இலை, மாம்பழம் என்றால் மாம்பழம், என ஓட்டு போடுங்கள்.
மேலும் பழைய வண்ணாரப்பேட்டையில் அளாகாபுரம் மோகன்ராஜ்க்கு ஆதரவாக அமைச்சர் ஜெயக்குமாருடன் இணைந்து விஜயகாந்த் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் ஸ்டாலினுக்கு ஓட்டு போடாதீர்கள், அவரை போல துரோகி கிடையாது. எஙக்ள் கூட்டணி தான் மெகா கூட்டணி. மறக்காமல் முரசு சின்னத்திற்கு ஓட்டு போடுங்கள். இவ்வாறு விஜயகாந்த் பிரச்சாரம் செய்தார்.