துரைமுருகன் வீடு முன் திரண்ட கேப்டன் படை! பதிலடி கொடுக்க கூடிய திமுகவினர்! காட்பாடியில் பதற்றம்!

காட்பாடியில் துரைமுருகன் வீட்டை முற்றுகையிட தேமுதிகவினர் முயற்சித்து வருகின்றனர்


சென்னை: காட்பாடியில் துரைமுருகன் வீட்டை முற்றுகையிட தேமுதிகவினர் முயற்சித்து வருகின்றனர். திமுக பொருலாளர் துரைமுருகனுக்கு எதிராக தேமுதிகவினர் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். தேமுதிகவின் கூட்டணி அணுகுமுறை பற்றி துரைமுருகன் நேற்று பேட்டி அளித்திருந்தார். இதையடுத்து காட்பாடி-சித்தூர் சாலையில் தேமுதிகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

காட்பாடி : தேமுதிகவை கடுமையான முறையில் விமர்சனம் செய்த திமுக பொருளாளர் காட்பாடி சட்டமன்ற உறுப்பினர்  துரைமுருகனை கண்டித்து ஆக்சிலியம் கல்லூரி அருகில் போராட்டம் காவல்துறை தடுத்து நிறுத்தும் மத்திய மாவட்ட செயலாளர் ஸ்ரீதர் தலைமையில் 50க்கும் மேற் பட்டோர் பங்கேற்பு போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறை கைது

 வேலூர் டு காட்பாடி சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு சாலை மறியலில் ஈடுபட்டு வரும் தேமுதிகவினர் கைது செய்ய ஏராளமான போலீசார் குவிப்பு