ஸ்டாலின் தூங்குறார்! எழுப்ப முடியாது! கூட்டணி பேச வந்த தேமுதிகவை வச்சி செஞ்ச துரைமுருகன்!

கூட்டணி குறித்து பேச வந்த தேமுதிக நிர்வாகிகளை செம்மையாக கலாய்த்து துரைமுருகன் அனுப்பியுள்ளார்.


சென்னை கோட்டூர்புரத்தில் திமுக பொருளாளரும் தொகுதி பங்கீட்டு குழு தலைவருமான துரைமுருகன் இல்லத்தில் தேமுதிகவின் சேலம் மாவட்டச் செயலாளர் இளங்கோவன், காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளர் அனைகை முருகேசன் ஆகியோர் சந்தித்து பேசினர்.

இது குறித்து துரை முருகன் அவர்கள் அளித்த பேட்டியில், தேமுதிக துணை செயலாளர் சுதிஷ் என்னிடம் தொலைபேசியில் பேசினார். அதில் திமுக வோடு கூட்டணி வைக்க விருப்பம் என்று சுதீஷ் கூறினார். அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாகவும் சுதீஷ் தெரிவித்தார்.

தங்களுக்கு திமுக கூட்டணியில்  சீட் தரவேண்டும் எனவும் சுதீஷ் கேட்டார். அதற்கு திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிந்துவிட்டதாக கூறினேன்.  நீங்கள் காலதாமதமாக வந்து இருப்பதாக வும் தெரிவித்தேன்.  

மேலும் இது தொடர்பாக முடிவு எடுக்கும் அதிகாரம் திமுக தலைவருக்கு மட்டுமே உண்டு எனவும், இன்று இரவு சென்னை வந்த பிறகு அவரிடம் இதுகுறித்து கலந்தாலோசிக்க இருப்பதாகவும் கூறினார். தற்போது தேமுதிகவிற்கு சீட் ஒதுக்கும் அளவிற்கு திமுக விடம் சீட் இல்லை என்றும், அப்படியே ஒருவேளை  கூட்டணி என்றாலும் திமுக சீட்களை தான் ஒதுக்கீடு செய்யவேண்டும், ஆனால் நாங்களே 20 இடங்களில் தான் நிற்கிறோம் என்றும் கூறினார்.

சுதீஷ் என்னிடம் அதிமுக கூட்டணியில் இருந்து விலகிவிட்டதாக கூறுகிறார். பிறகு அதிமுகவுடன் நாளை பேசுவோம் என்கிறார். அவர் பேசுவதில் ஏதோ தவறு இருக்கிறது. ஸ்டாலினிடம் பேச வேண்டும் என்றார்கள். நான் போன் போட்டேன். அவர் தூங்குகிறார், எழுப்ப வேண்டுமா? என்று உதவியாளர் கேட்டார்.

அந்த அளவிற்கு முக்கியத்துவம் இல்லை என்று கூறி போனை வைத்துவிட்டேன். இவ்வாறு துரைமுருகன் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.இதன் மூலம் தேமுதிக நிர்வாகிகளை துரைமுருகன் செம்மையாக கலாய்த்து அனுப்பியுள்ளார்.