அசிங்கமாகிடும்! துரைமுருகனுக்கு கேப்டன் மச்சான் சுதீஷ் பகிரங்க எச்சரிக்கை!

தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷ் செய்தியாளர் சந்திப்பு


திமுக பொருளாளர் துரைமுருகனை தனிப்பட்ட காரணங்களுக்காக பார்க்க சென்றேன் - சுதீஷ்

நாங்கள் அரசியலே பேசவில்லை - சுதீஷ்

மரியாதை நிமித்தமாக துரைமுருகனை சந்தித்தோம் - தேமுதிக நிர்வாகிகள்

துரைமுருகனிடம் கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை - தேமுதிக நிர்வாகிகள்

நாங்கள் துரைமுருகனை சந்தித்தது சுதீஷுக்கு தெரியாது - தேமுதிக நிர்வாகிகள்

திமுகவுடன் தேமுதிக பேசுவதாக எல்லோரும் கூறுகிறார்கள் - சுதீஷ்

நாங்கள் முதலில் பாஜகவுடன் கூட்டணி குறித்தும் பேசினோம் - சுதீஷ் 

பாஜகவினர் அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால், நாங்களும் அதிமுகவுடனும் பேசினோம் - சுதீஷ்

பாமகவுடன் கூட்டணி வைத்த அதிமுக, எங்களுடனும் ஒப்பந்தம் செய்திருக்கலாம் - சுதீஷ்

பாமகவுடன் செய்தது போல அதிமுக எங்களுடன் ஒப்பந்தம் செய்யாதது வருத்தம் அளித்தது - சுதீஷ்

திமுக அதன்பின் எங்களுடன் பேசியது - சுதீஷ்

பாமக - அதிமுக கூட்டணியை நாங்கள் எதிர்க்கவில்லை - சுதீஷ்

துரைமுருகன் என்னிடம் பேசியதை நான் சொல்லட்டுமா ?- சுதீஷ்

துரைமுருகன் அவரின் கட்சியை பற்றி பேசியதை சொல்லட்டுமா? -  சுதீஷ்

துரைமுருகன் அவரின் தலைமை குறித்து பேசியதை சொல்லட்டுமா ?- சுதீஷ்

உண்மைகளை சொன்னால் அசிங்கமாகிவிடும் சுதீஷ்