போலீஸ்காரர்களுக்கு டி.ஜி.பி. எச்சரிக்கை! லஞ்சம் வாங்குனா அம்புட்டுத்தான்!

புதிய டி.ஜி.பி.யாக திரிபாதி வந்ததில் இருந்து காவல் துறையினருக்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார். ஹெல்மட் போடாமல் போனால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவு போட்டார். அதன்படி இப்போது அடுத்த உத்தரவு வந்துள்ளது.


ஆம், காவல்துறையினர் மாமூல் என்ற பெயரில் லஞ்சம் வசூலித்தால் லஞ்ச ஒழிப்பு சட்டம் பாயும் என்று டிஜிபி திரிபாதி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். சின்னச்சின்ன விஷயங்களுக்கும் காவல் துறையினர் லஞ்சம் வாங்குவதும், ரோட்டோரக் கடைகளில்கூட தினமும் மாமூல் வாங்குவதும் அதிகரித்து வருகிறது.

அதனால், லஞ்சம் வாங்கினால் போலீஸ் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி திரிபாதி எச்சரிக்கை விடுத்துள்ளார். உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் விடுக்கப்பட்டுள்ள இந்த சுற்றறிக்கையில், மாமூல் வாங்கும் போலீசார் மீது லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதிபட தெரிவித்துள்ளார். 

இந்த அறிவிப்பை நிறைவேற்றும்போது திரிபாதி கொஞ்சம் எச்சரிக்கையுடனே செயல்படுத்த வேண்டியிருக்கும். ஏனென்றால், இதனை சீரியஸாக அமுல்படுத்தினால் கிட்டத்தட்ட பாதிக்கும் மேலான காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டிய சூழல் ஏற்பாடுவிடும்.