வில்லியம்சன் எடுத்த தவறான முடிவால் IPL லிருந்து வெளியேறிய சன் ரைசர்ஸ் அணி! டெல்லி த்ரில் வெற்றி!

சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான பிலே ஆஃப் போட்டியில் டெல்லி த்ரில் வெற்றி பெற்றது.


டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால் முதலில் பேட்டிங் செய்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தொடக்க ஆட்டக்காரர் மார்ட்டின் குப்தில் 19 பந்துகளுக்கு 36 ரன்களை விளாசினார். மனிஷ் பாண்டே 30 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார். மிடில் ஓவர்களில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி சன் ரைசர்ஸ் அணியின் ரன் விகிதத்தை குறைத்தனர். எனினும் பின்னர் களமிறங்கிய விஜய் ஷங்கர் 11 பந்துகளுக்கு 25 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் சன் ரைசர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்களை எடுத்தது.சிறப்பாக பந்து வீசிய கீமா பால் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

பின்னர் களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க ஜோடி முதல் விக்கெட்டிற்கு 66 ரன்களை எடுத்து நிலையான தொடக்கத்தை கொடுத்தனர். ப்ரித்வி ஷா சிறப்பாக விளையாடி 56 ரன்களை விளாசினார். பின்ன களமிறங்கிய பேட்ஸ்மேன்கள் அனைவரும் சீரான இடைவெளியில் தங்களது விக்கெட்களை பறிகொடுத்தனர். ரிஷாப் பான்ட் மட்டும் ஒரு முனையில் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.கடைசி 3 வர்களுக்கு 34 ரன்கள்  தேவைப்பட்ட நிலையில் பாசில் தம்பி வீசிய 18 வது ஓவரில் ரிஷாப் பான்ட் விளாசி 22 ரன்களை விளாசினார். இதுவே கேப்டன் வில்லியம்சன் செய்த மிகப்பெரிய  தவறாகும். கலீல் அஹ்மத் சிறப்பாக பந்து வீசி கொண்டிருந்த நிலையின் அவருக்கு ஓவர் இருந்ததும் அவரை பயன்படுத்தாமல் வில்லியம்சன் எடுத்த முடிவு தவறாக முடிந்தது.

2 ஓவர்களுக்கு 12 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சுலபமான நிலையில், புவனேஸ்வர் குமார் வீசிய 19 வது ஓவரில் 7 ரன்களை வோட்டுக்கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தினார். இதில் ரிஷாப்  பான்ட்டும் அடங்குவார். ரிஷாப்  பான்ட் சிறப்பாக விளையாடி 21 பந்துகளில் 49 ரன்களை விளாசினார். கடைசி ஓவரில் 5 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் டெல்லி அணி தட்டு தடுமாறி வெற்றி இலக்கை 1  பந்து மீதமிருக்க எடுத்தது. இதனால்  டெல்லி அணி 2 விக்கெட் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றது. நாளை சென்னை அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி ஆடவுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெரும் அணி பைனலில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது.