டெல்லி அணியை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய தல தோனி!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான பிலே ஆஃப் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி 147 ரன்களை எடுத்துள்ளது.


டாஸ் வென்ற சென்னை அணி, டெல்லி அணியை பேட்டிங் செய்ய பணித்தது. தொடக்கம் முதலே சென்னை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் டெல்லி கேபிட்டல்ஸ் அணி பேட்ஸ்மேன்கள் திணறினர். ரிஷாப் பாண்ட் மட்டும் 25 பந்துகளில் 38 ரன்களை எடுத்தார். காலின் முன்றோ 27 ரன்களை எடுத்தார்.  மற்ற பேட்ஸ்மேன்கள் யாரும் நிலைத்து நின்று ஆடாமல் வந்த வேகத்தில் அவுட் ஆகி வெளியேறினர்.

சென்னை அணியின் தீபக் சஹர் சிறப்பாக பந்து வீசி 2 விக்கெட்களை வீழ்த்தினார். மேலும் ஹர்பஜன் சிங் மற்றும் பிராவோ ஆகியோர் இரண்டு விக்கெட்களை வீழ்த்தினர்.இதனால் டெல்லி கேபிட்டல்ஸ்  அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 147 ரன்களை மட்டுமே எடுத்தது.