ஓய்வூதியதாரர்கள் ஆறு மாதங்கள் பணம் எடுக்கவில்லை என்றால் பணம் கட்..! தமிழக அரசு அதிரடி நடவடிக்கை ஏன்..?

ஓய்வூதியதாரர்கள் பணப்பரிமாற்ற விவகாரத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக வெளிவந்திருக்கும் தகவல்களை அடுத்து, ஓய்வூதியதாரகளின் வங்கிக் கணக்கில் இருந்து ஆறு மாதங்கள் பணம் எடுக்காதவா்களின் ஓய்வூதியத்தை நிறுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


பணி ஓய்வுக்குப் பிறகு, முதியவர்களின் தடையற்ற வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் நோக்கில் அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. மாதந்தோறும் அந்த ஈவுத் தொகை அவர்களுக்குரிய வங்கிக்கணக்குகளில் டெபாசிட் செய்யப்படும். இந்நிலையில், 6 மாதங்களுக்கும் மேல் அந்தப் பணத்தை எடுக்காமல் இருந்தால், அதன்பிறகு ஓய்வூதியத்தை நிறுத்த தமிழக அரசு முடிவெடுத்த்துள்ளது.

அதனால், தங்கள் வங்கியில் ஆறு மாதங்கள் பணப் பரிவா்த்தனைகள் நடைபெறாவிட்டால், அதுகுறித்த தகவலை சம்பந்தப்பட்ட வங்கி, கருவூலத் துறைக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும், ஓய்வூதியதாரா்கள் தங்களது வாழ்வுச் சான்றிதழ் அளிக்கவோ அல்லது கணக்கு குறித்த விவரங்களை ஆய்வு செய்வதற்கு வசதியாகவோ ஓய்வூதியம் வழங்குவது நிறுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஓய்வூதியதாரர்கள் கட்டாயமாக இந்த பணத்தை எடுத்தே ஆக வேண்டும் என்று எந்த விதியும் இல்லை. பலரும் இதனை சேமிப்பாக கருதி அப்படியே வைத்திருப்பதுண்டு. அவர்கள் சரியான காரணம் கூறவேண்டும் அப்படியில்லையென்றால், அவர்களுக்கும் சிக்கல் வரலாம் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் பல்வேறு முறைகேடுகளைத் தடுக்க முடியும் என்பதாலே, இப்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.