என்னை மட்டும் அல்ல..! என் தங்கையையும்..! சினிமா நடிகர் கொலை வழக்கில் நடிகை பகீர் வாக்குமூலம்!

துணை நடிகர் கொலை சம்பவத்தில் துணை நடிகை தன் வாக்கு மூலத்தின் மூலம் பல உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.


சென்னை கொரட்டூரில் சியாமத்தம்மன் என்னும் தெரு அமைந்துள்ளது. இங்கு ஷங்கர்(49) என்பவர் வசித்து வருகிறார். தேனாம்பேட்டையில் ஒரு பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவியின் பெயர் தேவி(42). தன்னுடைய வாழ்க்கையை தேவி டெய்லராக தொடங்கினார். அதன் பின்னர் இவர் சினிமா மற்றும் சீரியல்களில் துணை நடிகையாக நடித்து வந்துள்ளார். கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக நடிப்புத்துறையில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், இவருக்கும் வடபழனியை சேர்ந்த துணை நடிகரான ரவி(38) என்பவருக்கும் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. நெருக்கமான நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இவர்களுடைய கள்ளக்காதல் 6 வருடங்களாக நீடித்து வந்துள்ளது. 

இந்த விவகாரமானது ஷங்கருக்கு தெரியவர, திருந்தி வாழ மாறும் மனைவிக்கு அன்பாக அறிவுறுத்தியுள்ளார். கணவனின் அன்பை நினைத்து பூரித்த தேவி ரவியுடன் இருந்த கள்ளத்தொடர்பை முடித்து கொண்டுள்ளார். ரவியால் அவ்வளவு எளிதாக தேவியை மறக்க இயலவில்லை.

ரவி அவ்வப்போது தேவியிடம் தகராறில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டார். மேலும் மது அருந்திவிட்டு வந்து தேவியின் தங்கையான லட்சுமியிடமும் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் தேவி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். 

நேற்றிரவு முன்னர் வழக்கம்போல ரவி, லட்சுமியின் வீட்டிற்கு குடித்துவிட்டு சென்றுள்ளார். சமரசம் பேச தேவி, கணவர் ஷங்கர் மற்றும் சகோதரி லக்ஷ்மி மற்றொரு உறவினர் ஆகியோர் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்ததனர்.

ஆனால் அவர்களால் இயலவில்லை. மதுபோதையில் ரவி, லக்ஷ்மி மற்றும் தேவியை மிகவும் அவதூறாக திட்டியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த 4 பேரும் உருட்டுக்கட்டையால் ரவியை அடித்து கொலை செய்தனர். 

உடனடியாக ராஜமங்கலம் காவல் நிலையத்திற்கு சென்று நிகழ்ந்தவற்றை கூறி 4 பேரும் சரணடைந்தனர். கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 4 பேரையும் சிறையில் அடைத்தனர். மேலும் சம்பவயிடத்திற்கு சென்று ரவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காவல்துறையினர் தேவியிடம் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின. அதாவது, "எனக்கும் மதுரையை சேர்ந்த துணை நடிகரான ரவி என்பவருக்கும் நெருக்கம் ஏற்பட்டது. நெருக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. அவர் என்னிடம் நான் இயக்கும் அடுத்த திரைப்படத்தில் நீதான் நடிகை என்று கூறி என்னை தன்வசப்படுத்தினார். அடுத்த சில மாதங்களிலேயே அவருக்கு படவாய்ப்புகள் குறைந்து போனது. இதனால் அவர் மதுப்பழக்கத்துக்கு அடிமையானார். என்னுடைய பிள்ளைகளின் எதிர்காலத்தை கருதி நான் அவரிடமிருந்து விலகி செல்ல முயன்றேன்

என் வீட்டிற்கு வந்து தொல்லை செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார்‌. இதனால் என்னுடைய செல்போன் எண்ணையும், வீட்டு முகவரியையும் மாற்றிக்கொண்டேன். அதன்பின்னர் என்னுடைய தங்கையின் வீட்டிற்கு சென்று அவரை தொந்தரவு செய்ய தொடங்கினார். 

சம்பவத்தன்று என்னுடைய தங்கை என்னையும் என் கணவரையும் வீட்டிற்கு வருமாறு அழைத்தார். அங்கு மதுபோதையில் ரவி அவருடைய குழந்தையின் கழுத்தை நெறிக்க முயன்றபோது, நாங்கள் ரவியை அடித்து கொலை செய்தோம்" என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்த சம்பவமானது சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.