சாயங்காலம் ஆனா காகங்கள் செத்து செத்து விழுகின்றன..! பீதியில் ராணிப்பேட்டை மக்கள்! அதிர்ச்சி காரணம்!

கொரனா காரணமாக உலகமே முடங்கி உள்ள நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உணவின்றி காகங்கள் நாளுக்கு நாள் செத்து வருவதால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.


கொரனாவால் 192 நாடுகள் அடுத்து சென்ன செய்வதென தெரியாமல் முடங்கி உள்ளன. ஊரடங்கு உத்தரவால் மக்கள் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி வெளியில் வராமல் இருக்கின்றனர். இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் பன்னியூர் கிராமத்தில் கடந்த சில நாட்களாக காகங்கள் தொடர்ந்து இறந்து வருவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதற்குக் காரணம் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை முடங்கியுள்ளதால் அவற்றிற்கு போதுமான உணவு கிடைப்பதில்லை என கூறப்படுகிறது. பொதுமக்கள் வீட்டில் வழிபடும்போது முதலில் காகத்திற்குத்தான் உணவு தருவர். அதற்குக் காரணம் முன்னோர்கள் வந்து அந்த உணவை உண்பதாக நம்பிக்கை.

அதுமட்டுமின்றி மனிதர்கள் சாப்பிட்டுவிட்டு போடும் பிஸ்கெட், வேர்கடலை உள்ளிட்ட உணவு பொருள்களை சாப்பிட்டு மனிதர்களோடு வாழ்ந்து வருகின்றன காகங்கள். இந்நிலையில் 150க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ள பன்னியூர் கிராமத்தில் காகங்கள் இறந்து வருவது வேதனை தருவதாக உள்ளது.

இதுகுறித்து கால்நடைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து காகங்கள் இறப்பதற்கான காரணத்தை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.