அரசுப் பேருந்துக்குள் மழை..! குடை பிடித்துக் கொண்டு பயணித்த மக்கள்..! நாகர்கோவில் பரிதாபம்!

அரசு பேருந்துகள் பயணிகள் குடை பிடித்தபடி சென்ற சம்பவமானது கன்னியாகுமரி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கன்னியாகுமரி மாவட்டத்தில் திருவட்டாறு எனும் பகுதி அமைந்துள்ளது. திருவட்டாறிலுள்ள பனிமனையிலிருந்து குலசேகரம்- குளச்சல் பகுதிக்கு 332 எண் பேருந்து இயக்கப்பட்டது. என்ன பேருந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென்று பெருமழை பெய்துள்ளது. பேருந்தின் மேற்கூரையிலிருந்த ஓட்டைகள் வழியாக மழைநீர் புகுந்து இருகைகளை நனைத்தது.

பேருந்துகளில் பயணித்த பயணிகள் உள்ளே குடைபிடித்து சென்று கொண்டிருந்தனர். பேருந்தில் பயணிகள் ஓரமாக நின்று சென்றுக்கொண்டிருந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அரசு பேருந்துகளை இவ்வாறு தரமின்றி இயக்குவதற்கு பொதுமக்கள் பெரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவமானது கன்னியாகுமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.