கால்களை கவ்விய ராட்சத முதலை..! கதறித் துடித்த தங்கை..! மின்னல் வேகத்தில் வந்து காப்பாற்றிய அண்ணன்! மயிர் கூச்செறியும் சம்பவம்!

பிலிப்பைன்ஸ் நாட்டில் இளம்பெண்ணை இளைஞன் ஒருவன் முதலையிடம் இருந்து காப்பாற்றிய சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பிலிப்பைன்ஸ் நாட்டில் பலவான் என்ற நகரம் அமைந்துள்ளது. இங்கு 12 வயது இளம்பெண் ஒருவர் தன்னுடைய சகோதரருடன் அப்பகுதியிலுள்ள சிற்றோடையை கடக்க முயன்றார். அப்போது ராட்சத முதலை ஒன்று இளம் பெண்ணின் கால்களை கவ்வியது. வலியால் பாதிக்கப்பட்ட இளம்பெண் அலறி துடிக்க தொடங்கினார். 

உடனடியாக இளம் பெண்ணின் சகோதரர் முதலையின் மீது கற்களை வீச தொடங்கியுள்ளார். மேலும் முதலையின் வாயில் இருந்த தங்கையின் கால்களை இழுத்து வெளியே எடுத்துள்ளார். உடனடியாக அந்த இளம்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

முதலை காலை கச்சிதமாக கவ்வியதால் அவருடைய காலில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. இருப்பினும் மருத்துவ சிகிச்சைக்கு பிறகு இளம்பெண் நலமாக இருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

இந்த சம்பவமானது சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.