ரவுடித்தனம் செய்தால் பாத்ரூமில் வழுக்கி விழுந்து கை உடைந்தே தீரும்! தொடரும் போலீஸ் ட்ரீட்மென்ட்! தெறித்து ஓடும் ரவுடிகள்!

சமீப காலங்களில் காவல்துறையினரால் சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர்களுக்கு ஒரே மாதிரி கை உடைக்கும் கலாச்சாரத்திற்கு சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


நெல்லையில் அமைந்துள்ள பிரபல துணிக்கடையானது சரவணா செல்வரத்தினம். இந்த துணிக்கடையில் பட்டப்பகலில் ரவுடி ஒருவர் கடைக்குள் புகுந்து அரிவாளை காட்டி தகாத வார்த்தைகளை பிரயோகித்து ஊழியர்களை மிரட்டி உள்ளார். இது சம்பந்தமாக கடை ஊழியர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த சம்பவத்தின்  வீடியோவானது சமூக வலைதளங்களில் பரவியது. சிசிடிவி கேமரா பதிவுகளை கண்காணித்த காவல்துறையினர் அரிவாளை காட்டி மிரட்டிய ரவுடி தாழையூத்து கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம் என்பதனை உறுதி செய்தனர். 

முருகானந்தத்திடம் விசாரணை நடத்தியபோது அவர் கூறியதாவது: " சில தினங்கள் முன்னர் சரவணா செல்வரத்தினம் கடையில் நுழைந்து நெய் பாட்டிலை திருடினேன். அப்போது காவல்துறையினர் என்னை கையும் களவுமாக பிடித்தனர். அவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக கடை ஊழியர்களை அரிவாளை காட்டி மிரட்டினேன்" என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.

சிறையில் அடைக்கப்பட்ட முருகானந்தன் கழிவறையில் வழுக்கி விழுந்து கையை உடைத்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் சிறையில் அடைக்கப்படும் கைதிகளுக்கு கைகள் உடையது இது முதல் முறையல்ல. 

சில மாதங்களுக்கு முன்னர் சென்னையில் கைதான 7 பேர் கைகளை உடைத்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகின. ஒரே சமயத்தில் 7 பேர் கையை உடைத்து கொள்வது என்பது இயல்பானதல்ல. அதுவும் அவர்களுக்கு ஒரே மாதிரியாக வலது கை மட்டுமே உடைந்திருந்தது அனைவருக்கும் சந்தேகத்தை எழுப்பியது.

சமூக ஆர்வலர்கள் சிலர் கூறுகையில், "காவல் நிலையத்தில் சிறை பிடிக்கப்படும் கைதிகளின் கைகள் உடைவது சாதாரண விஷயமல்ல. யாரேனும் நிரபராதிகளின் கைகள் உடைக்கப்பட்டால் அவர்கள் வாழ்நாள் முழுவதும் மிகவும் சிரமப்பட வேண்டியதிருக்கும். கைகள் சரியாவதற்கு சுமார் 6 மாதகாலமாகும் சிலருக்கு வாழ்நாள் முழுவதும் சரி செய்ய முடியாத நிலையை அடைவர். இது மிகவும் தவறானதாகும்" என்று கூறியுள்ளார்.

கையுடைக்கும் கலாச்சாரத்தை காவல்துறையினர் கையில் எடுத்திருப்பது பொது மக்களை மிகவும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. அதே சமயம் பொதுமக்கள் இதனை வரவேற்கின்றனர். மேலும் ரவுடிகள் தற்போது ரவுடித்தனம் செய்ய ஒன்றுக்கு பல முறை யோசிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.