தன் நிர்வாண புகைப்படத்தை தானே வெளியிட்ட முகமது ஷமி மனைவி..! அதற்கு அவர் கூறிய பகீர் காரணம்!

பிரபல கிரிக்கெட் வீரர் முகமது ஷமியின் மனைவி அசின் ஜஹான் தனது கணவர் முகமது ஷமியுடன் ஏற்கனவே எடுத்த தனது நிர்வாண புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு அதிர்ச்சி அளித்துள்ளார்.


இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் மிகவும் முக்கியமானவர் முகமது ஷமி. முகம்மது ஷமிக்கும் , அசின் ஜஹானுக்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் இவர்கள் இருவருக்கும் பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தது. இதன் காரணமாக ஷமியின் மனைவி அசின் ஜஹான் தனது கணவர் ஷமி மீது பாலியல் குற்றச்சாட்டுகள் மற்றும் மேட்ச் பிக்சிங் போன்ற பல்வேறு புகார்களை பதிவு செய்து இருந்தார்.

இதன் காரணமாக ஷமியின் மனைவி அசின் ஜஹான் அவரது கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் ஷமியின் மனைவி அசின் ஜஹான் தனது கணவர் ஷமியுடன் தான் நிர்வாணமாக இருப்பது போன்ற புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரே வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை கண்ட நெட்டிசன்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் அந்த புகைப்படத்துடன் ஒரு பதிவையும் அவர் வெளியிட்டிருக்கிறார்.

அந்த பதிவில் அசின் ஜஹான், உன் கையில் ஒன்றும் இல்லாத போது நான் சுத்தமானவள் ஆக இருந்தேன். தற்போது நீ பெரிய ஆளாக இருக்கிறாய். ஆகையால் நான் சுத்தம் இல்லாதவளாக உனக்குத் தெரிகிறேன். பொய்கள் எப்போதும் உண்மையை மறைத்துவிட முடியாது. முதலை கண்ணீர்கள் நிலைக்காது எனவும் அவர் அந்த பதிவில் குறிப்பிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முகமது ஷமியின் மனைவி அசின் ஜஹான் வெளியிட்டுள்ள அவரது நிர்வாண புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.