யுவராஜ் சிங் அண்ணன் மனைவி நினைவு இருக்கிறதா? கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு புது அவதாரம்!

யுவராஜ் சிங்கின் அண்ணன் மனைவியான அகன்ஷா ஷர்மா தற்போது வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.


அகன்ஷா ஷர்மா யுவராஜ் சிங்கின் அண்ணன் சோரவர் சிங்கை திருமணம் செய்துகொண்டார் . இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். அகன்ஷா ஹிந்தியில் நடைபெற்றுவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார். இவர் கடைசியாக ஏஜ் ஆப் ஸ்பேஸ் எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார் இந்நிகழ்ச்சியில் அபிராஜ் சந்தா என்பவர் மற்றொரு போட்டியாளராக பங்கேற்றிருந்தார். 

இந்த போட்டியில் பங்கேற்ற போது இருவருக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டுள்ளது . அந்த பழக்கம் தற்போது காதலாக மாறி வருகிறது. இவர்களுக்கு இடையில் இருக்கும் காதலை சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஒப்புக்கொண்டுள்ளார் அகன்ஷா. இருவருக்கும் எப்படி பழக்கம் ஏற்பட்டது ? என்று கேள்வி எழுப்பிய நிலையில் பேசிய அவர்," நாங்கள் இருவரும் ஒன்றாக ஜிம்மிற்கு செல்வோம் . தினந்தோறும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வோம். அப்படியாக ஆரம்பித்த எங்களுடைய பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது .நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டிருக்கிறோம் . மேலும் என்னுடைய வாழ்க்கையில் இரண்டாவதாக எனக்கு ஒரு நல்ல காதல் கிடைத்துள்ளது என்று நான் நம்புகிறேன் " எனவும் கூறினார். 

இந்நிலையில் தற்போது அகன்ஷா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் பலவிதமாக கமெண்ட் செய்த வண்ணம் உள்ளனர் .