தோனியின் சாதனையை சமன் செய்த ரிஷாப் பாண்ட்!!!

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியின் ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்சில் இந்திய அணியின் விக்கெட் கீப்பரான ரிஷாப் பாண்ட் 6 கேட்ச்களை பிடித்தார்.


இந்திய விக்கெட் கீப்பர்களில் ஒரே இன்னிங்சில் 6 கேட்ச்களை பிடித்தவர் என்ற தோனியின் சாதனையை ரிஷாப் பாண்ட் இதன் மூலம் சமன் செய்துள்ளார்.

21 வயதான ரிஷாப் பாண்ட் தனது 6வது டெஸ்ட் போட்டியிலேயே இந்த சாதனையை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.