பயிற்சி ஆட்டத்தில் ப்ரித்திவ் ஷா காயம். அடிலெய்டு டெஸ்டில் பங்கேற்கமாட்டார்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் டிசம்பர் 6ம் தேதி தொடங்கவுள்ளது.


இதற்கு முன்னதாக இந்திய அணிக்கும் ஆஸ்திரேலியா அணிக்கும் எதிரான 4 நாள் கொண்ட பயிற்சி ஆட்டம் கடந்த நவம்பர் 28ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப்போட்டியின் மூன்றாம் நாளான நவம்பர் 30 ஆம் தேதி பவுண்டரி லைனில் பந்தை சிக்ஸ்சருக்கு செல்லாமல் தடுக்க முயன்ற பொது அவரது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக மருத்துவர்களின் அறிவுரைப்படி உடனடியாக அவர் மைதானத்தில் இருந்து வெளியேறினார்.  இதன் காரணமாக வரும் டிசம்பர் 6 ம் தேதி தொடங்கவுள்ள இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் இவர் பங்கேற்கமாட்டார் என தெரிகிறது. இந்த பயிற்சி ஆட்டத்தில் ப்ரித்திவ் ஷா 69 பந்துகளில் 66 ரன்களை எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

19 வயதான ப்ரித்திவ் ஷா தனது முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சதம் அடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிரடி ஆட்டக்காரரான இவர் விரைவில் காயத்திலிருந்து குணப்பட்டு வந்தால் அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியா பவுலர்களுக்கு நெருக்கடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடக்க அட்டகாரரான இவர் இல்லாத காரணத்தினால் அடிலெய்டு டெஸ்ட்டில் லோகேஷ் ராகுலுடன், முரளி விஜய் களம் இறங்குவார் என தெரிகின்றது.