ஐசிசி டி20 தர வரிசையில் இந்திய பந்துவீச்சாளர் முன்னேற்றம்

டி20 போட்டிகளின் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 20 இடங்கள் முன்னேறி 3ம் இடத்தை பிடித்துள்ளார்.


கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவில் நடந்த இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான தொடரில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் தரவரிசை பட்டியலில் 714 புள்ளிகளுடன் 3ம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இதே போல் இந்திய ஆஸ்திரேலியா தொடரில் சிறப்பாக பந்து வீசி ஆட்ட நாயகன் விருது பெற்ற ஆஸ்திரேலியா அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆதம் ஜாம்பா 670 புள்ளிகளுடன் 5 ம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திரவீரர் ரஷீத் கான் 793புள்ளிகளுடன் தொடர்ந்து இரண்டாம் இடத்தில் உள்ளார்.

டி20 போட்டிகளின் பேட்ஸ்மேன்களுக்கான தர வரிசை பட்டியலில் இந்தியாவின் ரோஹித் சர்மா மற்றும் ஷிகார் தவான் முறையே 9 மற்றும் 11 ம் இடத்தில் தொடர்ந்து உள்ளனர். பாகிஸ்தான் அணியின் பாபர் அசாம் 858 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்