தினகரன் கட்சியில் கிரேஸி மோகன், பாலாஜி இணைந்துவிட்டார்கள்..?

கிரேஸி மோகன் மற்றும் அவரது சகோதரர் பாலாஜி ஆகியோர் திடீரென டி.டி.வி. தினகரனை சந்தித்திருப்பது அரசியல் ஆசையால்தான் என்று சொல்லப்படுகிறது. .எப்போதும் அ.தி.மு..வுக்கு ஆதரவாக நிலை எடுத்துவருபவர் கிரேஸி மோகன்ஜெயலலிதா கட்சியில் சேர்ந்து எஸ்.வி.சேகர் போன்று கட்சிப் பதவிக்கு ஆசைப்பட்டது உண்டுஆனால்சினிமாவிலும்நாடகமேடையிலும் பிஸியாக இருந்ததால் கட்சியை மறந்திருந்தனர்.

இப்போது சினிமாவில் பெரிய வாய்ப்புகள் இல்லாத நிலையில் டி.டி.வி.தினகரனை அவரது அடையாறு இல்லத்தில் சந்தித்து இருக்கிறார்கள்.

தேர்தல் நேரங்களில் சினிமாக்காரர்களை வளைத்துப்பிடிப்பது அரசியல் கட்சிகளின் வழக்கமான நடைமுறைதான். அந்த வகையில் இவர்களைப் பிடித்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கிரேஸி மோகன் தரப்பில் சொல்லப்பட்டாலும்அரசியல் ஆசையால்தான் சந்திப்பு நடந்திருப்பதாக  சொல்லப்படுகிறதுயார் கண்டதுவரும் தேர்தலில் இவர்களுக்கு தேர்தலில் நிற்கவும் சீட் கிடைக்கலாம்...