தீபாவளிக்கு எப்போது வெடி வெடிக்கலாம்? எப்போது பட்டாசு வெடிக்க கூடாது? தமிழக அரசின் முக்கிய உத்தரவு!

இந்த ஆண்டும் பட்டாசு வெடிப்பதற்கு நிச்சயமாக நேர கட்டுப்பாடு விதிக்கப்படும் அமைச்சர் கருப்பண்ணன் கூறியிருப்பது புகைச்சலை ஏற்படுத்தியது.


சென்னையில் புகழ்பெற்ற அண்ணா பல்கலைக்கழகத்தில் மாசு கட்டுப்பாட்டு வலியுறுத்தும் வகையில் ஒரு நாள் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் தமிழக அரசின் சார்பில் அமைச்சர் கருப்பண்ணன் கலந்து கொண்டார்.

அப்போது அவர் நிருபர்களிடம் பேட்டி அளித்த போது, "சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் பட்டாசு படிப்பதற்காக நேரக் கட்டுப்பாடு விதிக்கப்படும். இதுகுறித்து தமிழக அரசு பரிசீலித்து வருகிறது. பரிசீலனைக்குப் பின்னர் நேரக் கட்டுப்பாடு குறித்த தகவல்கள் அறிவிக்கப்படும். புதிய ரக பட்டாசுகள் இந்த வருடம் அதிக அளவில் விற்பனைக்கு வந்துள்ளன.

ஆகையால் அவற்றை பரிசோதனை செய்ய தமிழக அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. பொதுமக்களின் உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கக்கூடிய அஜினோமோட்டோ கலந்த உணவுப் பொருட்களை தடை செய்வது குறித்து தமிழக அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. முதலமைச்சரிடம் இதுபற்றி எடுத்துக்கூறி விரைவில் நல்ல முடிவு அறிவிக்கப்படும்"  என்று கூறினார்.

பட்டாசு நேரக்கட்டுப்பாடு குறித்த தகவல்கள் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.