பசுமாடு பொருட்களால் தொழில் தொடங்குவோருக்கு 60 சதவீத நிதி உதவியளிக்கப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பசுமாட்டு சாணம், கோமியத்தில் தொழில் துவங்க ரூ.500 கோடி நிதி! 60% மானியம்! மோடி அரசு அதிரடி!

மத்திய அரசு சில நாட்களுக்கு முன்னர் ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக் என்ற திட்டத்தின் கீழ் 500 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. பசுமாடு தொடர்பான பொருட்களை உபயோகித்து தொழில் முனைவோருக்கு நிதி உதவிகள் அளிக்கப்படுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.
வல்லாப் கத்திரியா என்பவர் இந்த திட்டத்திற்கு தலைவராக பொறுப்பேற்றுள்ளார். அவர் அளித்த பேட்டியில், "பசுமாடு தொடர்பான பொருட்கள் விவசாயத்திற்கு பயன்படுவதால், அவற்றை உபயோகித்து தொழில் முனைவோருக்கு 60 சதவீத சலுகை அளிக்கப்படும். பசுமாடு கழிவுகளில் உள்ள மருத்துவ தன்மையை ஆராய்வதற்கு தனியாக நிதி வழங்கப்படும்.
கோசாலைகளில் பணியாற்றுவோருக்கு திறன் மேம்பாடு வகுப்புகள் நடத்தப்படும். திட்டத்தின் மூலம் பால் வழங்க முடியாத பசுக்கள் நிராகரிக்கப்படுவது தடுக்கப்படும். ராஜஸ்தான், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை இணைத்து பசு சுற்றுலா சர்க்யூட் உருவாக்கப்படுவதற்கான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்று கூறினார்.
இந்த திட்டமானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.