2 தலைகள், 3 கைகளுடன் பிறந்த குழந்தை..! பிரசவ வார்டில் டாக்டர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி! எங்கு தெரியுமா?

இரட்டைத்தலை மற்றும் 3 கைகளுடன் மத்திய பிரதேச மாநிலத்தில் குழந்தை ஒன்று பிறந்துள்ள செய்தி வியப்பை ஏற்படுத்தியுள்ளது.


மத்திய பிரதேச மாநிலத்தில் விடிஷா என்ற நகர் அமைந்துள்ளது. இந்த நகரத்தை சேர்ந்தவர் பபிதா அஹிர்வார். இவருடைய வயது 21. இவர் ஓர் ஆண்டிற்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார். அடுத்த சில மாதங்களிலேயே கர்ப்பம் அடைந்துள்ளார்.

இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பபிதா, சில நாட்களுக்கு முன்னர் பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  இரட்டைத்தலை மற்றும் 3 கைகள் கொண்ட ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் பிரசவத்தில் பிறந்துள்ளனர். விடிஷா நகரில் இதுபோன்று நிகழ்வது இதுவே முதல் முறையாகும். 

தற்போது குழந்தை மற்றும் தாய் நலமாக உள்ளனர். இருப்பினும் மருத்துவர்களின் தகவல்படி இதுபோன்ற குழந்தைகள் பிழைத்து, சாதாரணமான வாழ்க்கையை வாழ்வது மிகவும் கடினம். கரு சரியாக உருவாகாத காரணத்தினால்தான் இது போன்ற நிகழ்வுகள் அரங்கேறுவதாக கூறுகின்றனர். மேலும் மில்லியனில் ஒரு சில பேருக்கு மட்டுமே இதுபோன்ற பிரசவம் ஏற்படுவதாகவும் கூறியுள்ளனர்.

ஒட்டிப்பிறந்த இரட்டையர்களின் செய்தியானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.