வாடகை கொடுக்கவில்லை என்றால் பாலுறவு..! ஊரடங்கை பயன்படுத்தி குடும்ப பெண்களை வேட்டையாடும் வீட்டு உரிமையாளர்கள்!

வீட்டு வாடகையை கொடுக்க இயலாத பெண்களை உரிமையாளர்கள் தங்களுடன் உடலுறவு வைத்து கொள்ளுமாறு அழைக்கும் சம்பவங்கள் கனடா நாட்டில் அதிகரித்து வருவதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.


கனடா நாட்டில் அமைந்துள்ள செயிண்ட் ஜான்ஸ் என்ற இடத்தில் வாடகை வீட்டில் 2013-ஆம் ஆண்டில் ஜுடி மற்றும் அவரது காதலர் குடிபெயர்ந்தனர். மிகவும் ஆடம்பரமான வீடு என்பதால் வாடகையும் அதிகமாக இருந்தது. வாடகைக்கு குடியேறிய சில வாரங்களிலேயே காதலர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. 

இதனால் ஜூடியின் காதலர் அவரை விட்டு பிரிந்து சென்றுள்ளார். இதனால் ஜுடி பணப்புழக்கமின்றி மிகப்பெரிய சிக்கலில் சிக்கிக்கொண்டார். அப்போது வீட்டு வாடகை தர ஒரு யோசனை தருவதாக உரிமையாளர் ஜுடியிடம் பேசியுள்ளார்.

அதாவது வீட்டு வாடகை தருவதில் தள்ளுபடி தருவதாகவும், அதற்கு பதிலாக உடலுறவு வைத்து கொள்ளுமாறும் ஜுடியை அழைத்துள்ளார். முதலில் இதனை கிண்டலாக ஜூடி எடுத்துக்கொண்டார். அதன்பின்னர்தான் வீட்டு உரிமையாளர் அதில் மிகவும் ஆர்வமாக இருந்ததை புரிந்துகொண்டார்.

நிறைய முறை உடலுறவு அனுபவிப்பதற்கு வீட்டு உரிமையாளர் ஜுடியை கட்டாயப்படுத்தி உள்ளார். ஒருவழியாக தைரியமான முடிவு எடுத்து ஜுடி அந்த வீட்டிலிருந்து தன்னுடைய பெட்டி படுக்கைகளை எடுத்துக்கொண்டு வெளியேறியுள்ளார்.

இந்த சம்பவமானது கனடா நாட்டில் பரபரப்பை ஏற்படுத்துகிறது. இது ஜுடி என்ற பெண் மட்டும் சந்தித்த பிரச்சினை அல்ல. கனடா நாட்டில் செல்வந்தராக உள்ள வீட்டு உரிமையாளர்களின் வீட்டில் குடியேறும் ஆதரவற்ற இளம்பெண்கள் இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர் என்று பல சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.