ஓடிப்போன காதல் ஜோடியைப் பிடித்து கொலைவெறித் தாக்குதல்..! உயிருக்குப் போராடும் காதலன்... காதலி எங்கே..?

மகளின் காதலை ஒப்புக்கொள்ளாத பெற்றோர் திருமணத்திற்கு பிறகு மகளை கடத்தி சென்ற சம்பவமானது ஈரோடு மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஈரோடு மாவட்டத்தில் மெய்யப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய வீட்டிற்கு அருகே சரளை சண்முகபுரம் எனும் இடம் அமைந்துள்ளது. இப்பகுதியில் ஜீவிதா என்ற கல்லூரி பெண் வசித்து வந்துள்ளார். இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். காதலை இருவரும் தங்களுடைய பெற்றோரிடம் கூறினர்.

ஆனால் இருவரது வீட்டாரும் இந்த காதலுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். வேறு வழியின்றி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். இதனை அறிந்த ஜீவிதாவின் குடும்பத்தினர் சம்பவயிடத்திற்கு விரைந்து வந்தனர்.

மருமகன் என்றும் பாராமல் மெய்யப்பனை கடுமையாக அடித்து கொடுமைப்படுத்தியுள்ளனர். பின்னர் ஜீவிதாவை கடத்தி அங்கிருந்து சென்றுள்ளனர். படுகாயமடைந்த மெய்யப்பன் அருகிலுள்ள காவல்நிலையத்திற்கு சென்று நேர்மை இன்னல்களை தெரிவித்து, மனைவியை மீட்டுத்தருமாறு கோரிக்கை வைத்துள்ளார். ஜீவிதாவின் பெற்றோர் தான் அவரை கடத்தி சென்றதாக காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது ஈரோடு மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.