சாகுறதுக்கு முன்னாடி ஒரே ஒரு டைம் உல்லாசம்! கெஞ்சிய காதலன்! சம்மத்தித்த காதலி! சேலத்தில் காருக்குள் அரங்கேறிய பகீர் சம்பவம்!

உல்லாசமாக இருந்துவிட்டு காதல் ஜோடி நிர்வாணமாக காருக்குள் தற்கொலை செய்துகொண்ட சம்பவமானது சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சேலம் மாவட்டத்தில் செவ்வாய்ப்பேட்டை எனும் இடம் அமைந்துள்ளது. இப்பகுதியில் கோபி என்பவர் வசித்து வந்தார். இவர் வெள்ளி வியாபாரம் செய்துவந்தார். இவருடைய மகனின் பெயர் சுரேஷ். அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் படித்து வந்தார். அப்போது இவருக்கும் அந்த கல்லூரியை சேர்ந்த ஜோதிகா என்ற இளம் பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. ஜோதிகா, அதே பகுதியை சேர்ந்த ரவி என்ற வெள்ளி வியாபாரியின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இருவரும் 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். ஆனால் இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நேற்று திடீரென்று சுரேஷ் காணாமல் போயுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த கோபி தன்னுடைய உறவினர்களுடன் பல்வேறு இடங்களில் தேடி வந்தார்.

ஆனால் சுரேஷை கண்டுபிடிக்க இயலவில்லை. உடனடியாக அப்பகுதி காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர். அதே பகுதியில் கோபிக்கு சொந்தமான ஒரு கார்ஷெட் உள்ளது. அது திறந்திருப்பதை சந்தேகித்த உறவினர்கள் உள்ளே சென்று பார்த்தபோது ஒரு காரில் சுரேஷும், ஜோதிகாவும் நிர்வாணமாக சடலமாக கிடந்தனர்.

விரைந்து வந்த காவல்துறையினர் இருவரது உடலையும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் இருவரும் கடைசியாக ஒரு முறை உல்லாசமாக இருந்துவிட்டு இறக்கலாம் என்று நினைத்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற வியூகத்தில் விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவமானது செவ்வாய்பேட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.