17 வயதில் மகன்! 16 வயதில் மகள்! தவிக்கவிட்டு கணவன் மனைவி எடுத்த விபரீத முடிவு! அதிர்ச்சியில் உறைந்த உறவுகள்!

குடும்பத்தகராறு காரணமாக கணவன்-மனைவி அடுத்தடுத்து தற்கொலை செய்த சம்பவமானது திண்டுக்கலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி என்ற இடம் அமைந்துள்ளது. இங்கு முருகானந்தம் என்பவர் வசித்து வந்தார். இவருடைய வயது 45. இவருடைய மனைவியின் பெயர் வனிதா. வனிதாவின் வயது 35. இத்தம்பதியினருக்கு களஞ்சியம் என்ற 17 வயது மகனும், ஐஸ்வர்யா என்ற 16 வயது மகளும் உள்ளனர்.

இந்நிலையில் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டு வந்துள்ளன. இதனால் அடிக்கடி வனிதா தன்னுடைய தாயாரின் வீட்டுக்கு சென்றுவிடுவார். உறவினர்கள் அவரை சமாதானப்படுத்தி முருகானந்தத்துடன் அனுப்பி வைத்தனர். 

இதனிடையே கணவன் மனைவிக்கிடையே மீண்டும் தகராறுகள் ஏற்பட்டு வந்துள்ளன. மனவேதனை அடைந்த முருகானந்தம் விஷமாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றார். அவரின் செயலை பார்த்து அதிர்ச்சியடைந்த வனிதாவும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அவர்களின் அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். முருகானந்தத்தின் தந்தையார் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவமானது பழனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.