நான் செத்து பிழைச்சவடா! உயிரிழந்து 6 மணி நேரம் கழித்து மூச்சுவிட்ட இளம் பெண்! அதிர்ச்சியில் உறைந்த கணவன்!

இறந்து போனதாக கருதப்பட்ட பெண் ஒருவர் 6 மணி நேரத்திற்கு பிறகு உயிர் பெற்ற சம்பவமானது ஸ்பெயின் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஸ்பெயின் நாட்டில் ஆட்ரே மாஷ் என்ற பெண்மணி வசித்து வந்துள்ளார். இவருடைய வயது 34. இவர் தன் கணவருடன் இணைந்து மலையேற்றத்திற்கு சென்றுள்ளார். 

மலைப்பிரதேசத்தில் கடுமையான பனிப்பொழிவு இருந்த காரணத்தினால் நடுவிலேயே ஆட்ரே மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவருடைய கணவர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு ஆட்ரேவை சுமந்து சென்றுள்ளார். அப்போது ஆட்ரேவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

செய்வதறியாது அவருடைய கணவர் திகைத்து நின்றார். 6 மணி நேரம் கழித்து திடீரென்று ஆட்ரேவின் இதயம் துடித்துள்ளது. உடனடியாக அவருடைய கணவர் மருத்துவர்களை அழைத்து வந்து பரிசோதனை செய்துள்ளார். அப்போது ஆட்ரே உயிருடன் இருப்பதை மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். சீரான சிகிச்சைக்கு பிறகு ஆட்ரே தற்போது நலமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் அவர்கள் கூறுகையில், சாதாரண வெப்ப நிலை இருந்திருந்தால் கண்டிப்பாக ஆட்ரேவின் இதயம் பாதிக்கப்பட்டடிருக்கும். தாழ் வெப்ப நிலை நிலவி வந்ததால் மூளை பாதிப்படையாமல் இருந்துள்ளது. ஆகையால் 6 மணி நேரத்திற்கு பிறகும் கூட அவரால் உயிர்பிழைக்க முடிந்துள்ளது என்று கூறியுள்ளனர்.

இந்த சம்பவமானது உலகில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.