தேனிலவில் இருந்து திரும்பிய புதுமணத் தம்பதி! மனைவியின் ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்து அதிர்ந்த கணவன்! என்னாச்சு தெரியுமா?

தேனிலவு சென்று வந்த தம்பதியினர் புற்றுநோய் மற்றும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள செய்தியாளர்கள் அயர்லாந்து நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அயர்லாந்து நாட்டில் கேட்டி என்ற 27 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இவருடைய கணவரின் பெயர் ஜோசஃப். ஜோசஃப்பின் வயது 30. இருவரும் சென்ற ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இதனிடையே சில நாட்களில் மகிழ்ச்சியாக தேனிலவு சென்றனர்.

தேனிலவு முடித்தவுடன் அடுத்த நாள் வேலைக்காக ஜோசஃப் சென்றுள்ளார். அதன்பின்னர் கேட்டி தலைக்கு குளித்த பிறகு, தலையை வாருவதற்காக கைகளை உயர்த்தியுள்ளார். ஆனால் அவரால் தலைமுடியை வார இயலவில்லை. கடுமையான தலைவலியால் அவதிப்பட்ட அவரால், அந்நிலையை குறித்து கணவனிடமும் தெரிவிக்க இயலவில்லை. கடவுள் புண்ணியமாக அவருடைய தாயாரான ரோஸ் அந்த சமயத்தில் அப்பகுதிக்கு வந்துள்ளார். 

மகளின் நிலையைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு ஸ்கேன் செய்து பார்த்தபோது, கேட்டியின் இதயத்திற்கு அருகில் இருப்பதாகவும், மூச்சுப்பாதை சரியாக இல்லாத காரணத்தினால் அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதனிடையே அடிமேல் அடி விழுவது போன்று, ஜோசஃப்பிற்கு நீர்நினப்புற்றுநோய் ஏற்பட்டது. அதிலிருந்து மீள்வதற்காக சிகிச்சைகளை மேற்கொண்டு வந்துள்ளார். இதுகுறித்து சமூக வலைதளம் ஒன்றில் பேட்டி அளிக்கையில் கேட்டி, "திருமணமாகி 50 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த தம்பதியினர் கூட இதுபோன்ற துயரங்களை சந்திக்க முடிந்திருக்குமா என்பது தெரியவில்லை. ஆனாலும் மனம் தளரவில்லை. நிச்சயமாக மீண்டு வந்து மகிழ்ச்சியான வாழ்வை வாழ்வோம் என்ற உறுதி இருக்கிறது" என்று கூறியுள்ளார்.

இந்த செய்தியானது அயர்லாந்து நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.