சாலை ஓரத்தில் உயிருக்கு போராடிய பெண்மணி! ஓடோடிச் சென்று முதல் உதவி! அசத்திய டாக்டர் விஜயபாஸ்கர்!

விபத்தில் சிக்கி உயிருக்கு போராடி கொண்டிருந்த தம்பதியினரை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் காப்பாற்றிய சம்பவமானது புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியது.


புதுக்கோட்டையில் சென்ற வாரத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அவற்றில் பங்கேற்பதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்றிருந்தார். நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு விஜயபாஸ்கர் அவர்கள் சென்னைக்கு திரும்பி கொண்டிருந்தார். 

புதுக்கோட்டையில் கீரனூர் அருகே இளையாவயல் பகுதிக்கு விஜயபாஸ்கர் வந்து  கொண்டிருந்தார். அப்போது உயிருக்கு போராடிய நிலையில் தம்பதியினர் சிரமப்பட்டு கொண்டிருந்தனர். சகாயராஜ் மற்றும் மேரி சாலை விபத்தில் சிக்கி கொண்டனர். மேரிக்கு  மூக்கில் பலத்த அடி ஏற்பட்டது. அவருடைய மூக்கிலிருந்து ரத்தம் பலமாக கொட்டியது.

சகாயராஜுக்கு கையில் அடி ஏற்பட்டது.  இவர்கள் விபத்தில் சிக்கியதை கண்ட அமைச்சர் விஜயபாஸ்கர் சட்டென்று தன்னுடைய காரில் இருந்து கீழே இறங்கினார். 108 ஆம்புலன்ஸுக்கு அழைப்பு விடுத்தனர். ஆனால் தன்னுடைய பாதுகாப்பு காரிலேயே அவர்களை கீரனூர் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தம்பதியினரை காரில் அனுப்பிய விஜயபாஸ்கர், மருத்துவமனை கால் செய்து அவர்களுக்கு  சிகிச்சை அளிக்கும் படி உத்தரவிட்டார். அமைச்சரின் செயலை கண்ட பொதுமக்கள் அவரை வெகுவாக பாராட்டினர். இந்த சம்பவமானது கீரனூர் பகுதியில் சிறிது நேரம் சாலை நெரிசலை ஏற்படுத்தியது.