நான் அவன் கூடத்தான் போவேன்..! போலீஸ் ஸ்டேசனில் வைத்து இளம் பெண் எடுத்த முடிவு! கன்னியாகுமரி பரபரப்பு!

காவல் நிலையத்தில் நீண்ட  பாசப்போராட்டத்திற்கு பிறகு கல்லூரி மாணவி காதலனை கரம்பிடித்த சம்பவமானது சுசீந்திரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நாகர்கோவில் மாவட்டத்தில் பறக்கை எனும் இடம் அமைந்துள்ளது. இப்பகுதிக்குட்பட்ட செட்டி தெருவில் காசிலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய மகளின் பெயர் காயத்ரி. காயத்ரியின் வயது 20. இவர் அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு பி.ஏ. பட்டம் படித்து வருகிறார்.

இவருக்கு அதே பகுதியை சேர்ந்த ஸ்டீபன் என்ற இளைஞருடன் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. நெருக்கமானது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. 5 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்துள்ளனர். இதனிடையே சில நாட்களுக்கு முன்னர் தேர்வு எழுத சென்ற காயத்ரி வீடு திரும்பவில்லை. காசிலிங்கம் மற்றும் அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும், காயத்ரியை கண்டுபிடிக்க இயலவில்லை. அதன் பின்னர், அவர் சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

அச்சமயத்தில் காயத்ரி தன்னுடைய தாயாருக்கு கால் செய்து, ஸ்டீஃபனை திருமணம் செய்து கொண்டதாக கூறியுள்ளார். மேலும் காதல் ஜோடி சுசீந்திரம் காவல் நிலையத்தில் பாதுகாப்புக்காக தஞ்சமடைந்தனர்.

இருவீட்டாரும் சுசீந்திரம் காவல் நிலையத்திற்கு வந்தனர். அப்போது காயத்ரியின் பெற்றோர் அவரை தங்களுடன் வருமாறு அழைத்தனர். ஆனால் காயத்ரி அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. 1 மணி நேர நீண்ட போராட்டத்திற்கு பிறகு காயத்ரியின் பெற்றோர் காவல்நிலையத்தில் இருந்து வெளியேறினர். 

பின்னர் காவல்துறையினர் காதல் ஜோடியை வாழ்த்தி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவமானது சுசீந்திரம் பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.