ஏன்டா உனக்கு என் தங்கச்சி கேட்குதா? காட்டிக் கொடுத்த நண்பன்! வெட்டி கூறு போட்ட அண்ணன்! நெல்லை திகுதிகு!

காதலித்து திருமணம் செய்துகொண்ட இளைஞரின் தலை துண்டிக்கப்பட்ட சம்பவமானது திருநெல்வேலி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருநெல்வேலி மாவட்டத்தில் நாங்குநேரி எனும் இடம் அமைந்துள்ளது. இதற்கு உட்பட்ட மறுகால்குறிச்சி என்னும் பகுதியை சேர்ந்தவர் அருணாச்சலம். இவருடைய மகனின் பெயர் நம்பிராஜன். இவர் அதே பகுதியில் உள்ள கீழத்தெரு என்னும் பகுதியில் வசித்து வந்த தங்கப்பாண்டி என்பவரது மகளான வான்மதியை காதலித்து வந்துள்ளார். இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் காதலுக்கு எதிர்ப்பு வராது என்று எண்ணியுள்ளனர். ஆனால் தங்கப்பாண்டி உள்ளூரில் சற்று செல்வாக்கு மிக்கவர். ஆதலால் இவர்களது காதலுக்கு தங்கப்பாண்டி எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். 

ஆனாலும் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி 2 மாதங்களுக்கு முன்னர் இருவரும் கோவிலில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். நம்பிராஜனின் தந்தை அருணாச்சலத்தின் உதவியுடன் திருநெல்வேலி டவுன் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். சில நாட்களுக்கு முன்னர் ஊரிலிருந்து நம்பிராஜன் பார்ப்பதற்காக அவருடைய நண்பர் முத்துப்பாண்டி வந்துள்ளார். வீட்டில் இருவரும் ஒன்றாக மது அருந்தி விட்டு வெளியே புறப்பட்டுள்ளனர். அப்போது வான்மதி நம்பிராஜனை தடுத்துள்ளார். ஆனால் நம்பிராஜன் நண்பனின் மேல் கொண்ட நம்பிக்கையால் சென்றுள்ளார். 

அப்போது புதருக்குள் மறைந்திருந்த வான்மதியின் சகோதரரான செல்லச்சாமி, மர்மநபர்கள் உடன் சேர்ந்து நம்பிராஜன் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர். அவருடைய தலையை சீவி, தலை வேறு உடம்பு வேறாக வீசி எறிந்தனர்.

நண்பருடன் சென்ற நம்பிராஜன் நெடுநேரமாகியும் வீட்டிற்கு வராததால் வான்மதியும், அருணாசலமும் அப்பகுதி காவல்நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளனர். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது ஊரில் ஒரு துக்க நிகழ்ச்சிக்கு சென்றிருந்த செல்லச்சாமியை அவருடைய நண்பர்கள் கேலி செய்ததாகவும், அதனால் ஆத்திரமடைந்த செல்லச்சாமி நம்பிராஜனை கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவமானது நாங்குநேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.