திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான மகள்..! பேரதிர்ச்சி அடைந்த தாய் - தந்தை..! காரணம் 3 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சம்பவம்!

3 ஆண்டுகளுக்கு முன்னரே காதலனுடன் செய்துகொண்ட திருமணத்தை பெற்றோரிடமிருந்து இளம்பெண் மறைத்த சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


காரக்குறிச்சி என்னும் பகுதியை சேர்ந்தவர் சிவரஞ்சினி. இவர் ஒரு கல்லூரி மாணவியாவார். கடந்த பல ஆண்டுகளாக இவர் கிடங்கல் பகுதியை சேர்ந்த சுதாகர் சிங் என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். தங்களுடைய காதலை தொடங்கி 3 ஆண்டுகள் நிறைவடைந்த போது திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர்.

அவர்களுடைய காதல் விவகாரமானது இருவீட்டாருக்கும் தெரியவில்லை. இந்நிலையில் 3 ஆண்டுகளுக்கு முன்னர் இருவரும் பதிவு திருமணம் செய்துள்ளனர். திருமணத்திற்குப் பின்னர் அவரவருடைய வீட்டிற்கு சென்று இயல்பான வாழ்க்கையை நடத்தி வந்துள்ளனர்.  

இதற்கிடையே திடீரென்று சிவரஞ்சனி கருவுற்றார். தான் கருவுற்றது அறிந்தவுடன் காதலனிடம் சிவரஞ்சினி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். தங்களுடைய மகள் திடீரென்று காணாமல் போன கத்தினாள் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக திண்டிவனம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் விசாரணை நடத்தியது சிவரஞ்சனி தன்னுடைய கணவரான சுதாகரை சந்திக்க சென்றிருப்பது தெரிய வந்துள்ளது. பின்னர் இரு வீட்டாரும் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கு நிகழ்ந்த கதை முழுவதையும் காவல்துறையினர் எடுத்துரைத்தனர்.

2 வீட்டாரும் காதலுக்கு ஆட்சேபனை தெரிவிக்காத காரணத்தினால் காதல் ஜோடியை காவல்துறையினர் ஒன்றாக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவமானது திண்டிவனம் காவல் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்பட்டது.