துடிக்க துடிக்க வெட்டிக் கொல்லப்பட்ட பெண்! போலீசிடம் சிக்கிய கணவன் - மனைவி! அதிர வைக்கும் காரணம்!

விவசாய நிலத்தில் பெண் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் கணவன்-மனைவி கைது செய்யப்பட்டுள்ளது ராஜபாளையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ராஜபாளையம் பகுதியில் தேவதானம் எனும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர் கணபதியம்மாள். இவருடைய சொந்தமான விவசாய நிலம் சிலாப்பேரை எனும் இடத்தில் அமைந்துள்ளது. நேற்று மாலை உனக்கு சொந்தமான கண்மாயில் கணபதியம்மாள் வேலை பார்த்து வந்தார்.

அதே பகுதியை சேர்ந்தவர் காளியப்பன். இவருடைய மனைவியின் பெயர் நாகம்மாள். இத்தம்பதியினருக்கும், கணபதியம்மாளுக்கும் விலளநிலத்தில் தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த வண்ணமிருந்தன.

தம்பதியினர் கணபதியம்மாளை கொலை செய்ய திட்டமிட்டனர். நேற்று மாலை கணபதியம்மாள் வயல்வெளியில் வேலை பார்த்து கொண்டிருந்தபோது கணவன்-மனைவி கணபதியம்மாளை அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளனர்.

சம்பவமறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், கணவன் மனைவியை கைது செய்தனர். மேலும் கணபதியம்மாளின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

இந்த சம்பவமானது தேவதானத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.