நள்ளிரவு 12 மணி..! கணவனுக்கு கல்யாண நாள் சர்ப்ரைஸ்..! கடலில் இறங்கி இளம் மனைவி செய்த செயல்! ஆனால் நொடியில் அரங்கேறிய பயங்கரம்!

பாலவாக்கம் கடற்கரையில் தம்பதியினர் ஒருவர் தங்களுடைய திருமணநாளை கோலாகலமாக கொண்டாட சென்ற போது கடல் அலையில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


விக்னேஷ் வினிசைலா தம்பதியினர் வேலூரை சேர்ந்தவர்களாவர். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி இரண்டு ஆண்டுகள் முடிவடைந்துள்ளன. தங்களுடைய இரண்டாவது திருமண நாளை கோலாகலமாக கொண்டாடுவதற்காக இருவரும் இணைந்து பாலவாக்கத்தில் உள்ள கடற்கரைக்கு சென்றுள்ளனர். சரியாக 12 மணி இருக்கும் பொழுது கடலில் இறங்கி ஒருவருக்கு ஒருவர் மோதிரம் மாற்றிக் கொள்ளலாம் என்று திட்டமிட்டிருந்தனர்.

அந்த வகையில் சரியாக 12 மணி இருக்கும் பொழுது விக்னேஷ் வினிசைலா தம்பதியினர் ஒன்றிணைந்து கடலுக்குள் சென்றுள்ளனர். மோதிரம் மாற்றிக் கொள்ளலாம் என்று சென்ற இந்த தம்பதியினருக்கு மிகப் பெரிய அதிர்ச்சியான சம்பவம் காத்துக்கொண்டிருந்தது. கடலுக்குள் சென்ற தம்பதியினரின் வினிசைலாவை மிகப்பெரிய ராட்சத அலை கடலுக்குள் இழுத்துச் சென்றது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது கணவர் விக்னேஷ் தன் மனைவியை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று கடலுக்குள் சென்று தேடி இருக்கிறார். எங்கு தேடியும் அவருடைய மனைவியை கண்டுபிடிக்க இயலாததால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார் தகவலறிந்து வந்த போலீசார் உடனடியாக வினிசைலாவை தேடியுள்ளனர்.

எங்கு தேடியும் வினிசைலா நீண்ட நேரமாக கிடைக்கவில்லை. உயிருடன் அவரை மீட்க வேண்டும் என எதிர்பார்த்து தேடி அவர்களுக்கும் அதிர்ச்சிதான் மிஞ்சியது. அதாவது அவர்கள் தேடிக் கொண்டிருந்த சமயத்தில் வினிசைலாவின் உடல் ஓரமாக கரை ஒதுங்கியது அதனை பார்த்த அவரது கணவர் விக்னேஷ் கதறியழுத சம்பவமும் அங்கிருந்தவர்கள் நெஞ்சங்களை அதிர வைத்தது.

இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.