ஆண் வாரிசு இல்லாத காரணத்தினால் மனைவி, சிறுமியை கடத்தி கணவனுக்கு திருமணம் செய்து வைத்த சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆண் குழந்தை வேண்டும்..! அதனால் 16 வயது சிறுமியை கணவனுக்கு விருந்தாக்கிய விபரீத மனைவி! கடலூர் அதிர்ச்சி!
கடலூர் மாவட்டத்தில் திட்டக்குடி எனும் கிராமம் அமைந்துள்ளது. இங்கு ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகனின் பெயர் அசோக்குமார். அசோக்குமாரின் வயது 35. 10 ஆண்டுகளுக்கு முன்னர் இவருக்கு சிறுமுளை கிராமத்தை சேர்ந்த செல்லக்கிளி என்னும் பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.
இத்தம்பதியினருக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். இதனிடையே ஆண் வாரிசு இல்லாத வருத்தம் குடும்பத்தினரிடம் பெரிதாக காணப்பட்டது. இதனிடையே அசோக்குமார் தான் வேலை பார்த்து வரும் நிறுவனத்திலுள்ள 16 வயது இளம்பெண் மீது காதல் கொண்டுள்ளார். "நான் உன்னை காதலிக்கிறேன். எனக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது.
இருப்பினும் ஆண் வாரிசு இல்லாத காரணத்தினால் உன்னை 2-வது திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன். இதற்கு என் மனைவியும் சம்மதம் தெரிவித்திருக்கிறார்" என்று கூறியுள்ளார். ஆனால் இதற்கு அந்த சிறுமி ஒப்புக்கொள்ளவில்லை. ஆத்திரமடைந்த அசோக்குமாரின் மனைவி செல்லக்கிளி அந்த சிறுமியை கடத்தி, கோவிலில் வைத்து அசோக்குமாருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.
செய்தி அறிந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர், செல்லக்கிளி சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்து வைத்தது உண்மை என்று தெரிய வந்தது. உடனடியாக காவல்துறையினர் அசோக்குமார் மற்றும் செல்லக்கிளியை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
இந்த சம்பவமானது திட்டக்குடி கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.