காவல்துறை வாகனத்தில் ஒரு ஜோடி உடலுறவு வைத்துக்கொண்ட சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போலீஸ் காருக்குள் செக்ஸ்! மதுபோதையில் சிக்கிய கணவன் - மனைவி செய்த பகீர் செயல்!

அமெரிக்கா நாட்டில் ஃப்ளோரிடா என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் ஆரண் தாமஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவியின் பெயர் மேகன். இருவரும் சென்ற வாரம் மதுபோதையில் வாகனம் ஓட்டியுள்ளனர். வாகனத்தை இன்னொரு காரின் மிக அருகில் ஓட்டி சென்றதால் காவல்துறையினர் கைது செய்து வண்டியில் அமர வைத்தனர்.
மதுபோதையிலிருந்த இருவரும் தங்கள் ஆடைகளை அவிழ்த்து உடலுறவில் ஈடுபடத்தொடங்கினர். சில நிமிடங்களிலேயே கார் குலுங்குவதன் மூலம் காவல்துறையினர் சந்தேகமடைந்தனர். உள்ளே பார்த்தபோது இருவரும் ஆடையின்றி உடலுறவில் ஈடுபட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அவர்களை கட்டுப்படுத்த முயன்றபோது தாமஸ் அருகில் இருந்த பூங்காவிற்கு நுழைந்து தப்பித்து செல்ல முயற்சித்தார். ஆனால் காவல்துறையினர் அவரை கையும் களவுமாக பிடித்தனர்.
இருவர் மீதும் வழக்குகளை காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர். பொதுயிடத்தில் முகம் சுளிக்கும் வகையில் ஈடுபட்டுள்ளதாகவும், மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டியதற்காகவும் இருவர் மீதும் பல வகையான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே ஏற்கனவே தாமஸ் மீது திருட்டு போன்ற வழக்குகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சம்பவமானது அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.