தமிழகத்தின் 33 மாவட்டங்களில் பரவிய கொரோனா..! ஒவ்வொரு மாவட்டத்திலும் எத்தனை பேருக்கு நோய்? முழு விவரம் உள்ளே!

தமிழகத்தில் மண்டல வாரியாக கொரோனா வைரஸ் எவ்வாறு பரவியுள்ளது என்று சுகாதாரத்துறை செயலர் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. கிட்டத்தட்ட 73,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் இதுவரை உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் தொடங்கி, இத்தாலி, வடகொரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய கைகளை சுத்தம் செய்யாமல் பொருட்களை தொடுவதிலிருந்து வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. 13,40,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்தியா முழுவதிலும் 4281 பேருக்கு இந்த கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை 311 பேர் குணமடைந்து இருப்பதாகவும், 111 பேர் உயிரிழந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தியாவிலேயே தமிழ்நாடு 2-வது இடம் வகிக்கிறது. 621 பேர் இந்த கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது. நேற்று மாலை தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலர் கொடுத்த பேட்டியில் மண்டல வாரியாக எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்தது.

மார்ச் 31-ஆம் தேதி தொடங்கி நாளொன்றுக்கு 57, 110, 75, 81, 74, 86, 50 என்று வீதம் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது மாநில அரசையும் தமிழ்நாட்டு மக்களையும் பெரிதளவில் அச்சமடைய செய்துள்ளது. மேலும் டெல்லியில் நிஜாமுதீன் மர்காஸ் மசூதியில் தப்லீகி ஜமாத் மத போதகர்கள் சார்பாக நடத்தப்பட்ட மதக்கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மூலம் தமிழகத்தில் அதிகளவில் வைரஸ் பரவியதாக கூறப்படுகிறது.

621 பேரில், 570 பேர் இந்த கூட்டத்திற்கு சென்று வந்தவர்களும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுமாவர். இந்நிலையில் மண்டல வாரியாக எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற செய்தியை நேற்று சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் வெளியிட்டார்.  

சென்னையில் 110, கோவையில் 59, திண்டுக்கல்லில் 45, திருநெல்வேலியில் 38, ஈரோட்டில் 32 திருச்சியில் 30, நாமக்கல்லில் 28, ராணிப்பேட்டையில் 25,  செங்கல்பட்டில் 24, கரூர் மற்றும் மதுரையில் 23, மதுரையில் 19, விழுப்புரத்தில் 16, கடலூரில் 13, சேலம், திருவள்ளூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் 12, நாகப்பட்டினம், தூத்துக்குடி, திருப்பத்தூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் 11, திருவண்ணாமலையில் 9, தஞ்சாவூரில் 8, திருப்பூரில் 7, கன்னியாகுமரி மற்றும் காஞ்சிபுரத்தில் 6, சிவகங்கை மற்றும் வேலூரில் 5, நீலகிரியில் 4, கள்ளக்குறிச்சி மற்றும் ராமநாதபுரத்தில் 2, அரியலூர் மற்றும் பெரம்பலூரில் 1 என மொத்தம் 33 மாவட்டங்களில் இந்த வைரஸ் பரவியுள்ளதாக நேற்று சுகாதாரத்துறை செயலர் கூறினார்.

இந்த செய்தியானது தமிழக மக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.