வாடகை கொடுக்க பணம் இல்லை..! ஹவுஸ் ஓனர் விரட்டிட்டாங்க..! அதான்..! மனைவி குழந்தைகளுடன் நடுத்தெருவுக்கு வந்த நாகராஜன்!

ஊரடங்கு காலத்தில் வருமானத்தைவிட இருந்து வாடகை கட்ட இயலாத காரணத்தினால் குடும்பம் நடுத்தெருவுக்கு வந்த சம்பவமானது கரூர் மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கரூர் மாவட்டத்தில் வெள்ளியணை எனும் இடம் அமைந்துள்ளது. இதற்கு அருகே உள்ள மணவாடி பெரியார் நகர் காலனி எனும் இடத்தை சேர்ந்தவர் நாகராஜன். இவருடைய வயது 30. இவர் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். அதே பகுதியிலுள்ள போடு ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டுள்ளதால் குடும்பத்தினர் வறுமையில் வாடி வந்தனர்.

இவருடைய வீட்டு ஓனரான லக்ஷ்மி, நாகராஜனின் கஷ்டத்தை புரிந்து கொள்ள இயலாமல் சென்ற மாத வாடகை கேட்டு அவரை கொடுமைப்படுத்தி வந்துள்ளார். ஒருவழியாக நாகராஜன் மண்டியிட்டு கேட்டு கொண்டதை அடுத்து 1 மாத அவகாசம் வழங்கியுள்ளார். மே மாதம் தொடங்கியவுடன் சென்ற மாதம் வாடகை கேட்டு லக்ஷ்மி மீண்டும் நாகராஜனை கொடுமைப்படுத்த தொடங்கியுள்ளார்.

வாடகை தர வழியில்லாமல் நாகராஜன் குடும்பத்தினருடன் சேர்ந்து வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவமறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் நாகராஜனிடம் விசாரணை நடத்தினர். 

பின்னர் சமரசம் பேசுவதற்காக காவல்துறையினர் லட்சுமியின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது அவர்கள் நாகராஜனின் நிலைமையை எடுத்துக்கூறி லட்சுமிக்கு புரியவைத்தனர். ஊரடங்கு முடிந்த பின்னர், வாடகை பாக்கியை நிச்சயமாக நாகராஜன் திருப்பி செலுத்திவிடுவார் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.

அதன்பிறகுதான் லக்ஷ்மி நாகராஜனை மீண்டும் வீட்டிற்குள் சேர்த்துள்ளார். நாகராஜன் தன்னுடைய குடும்பத்தினருடன் மீண்டும் வாடகை வீட்டில் தங்க சென்றுள்ளார். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.