ஆண் குழந்தை பிறக்காத காரணத்தினால் தாயொருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
3 பெண் குழந்தைகள் இருந்தும் 4வதாக ஆண் குழந்தைக்கு ஆசைப்பட்ட இளம் தாய்..! கிடைக்காததால் எடுத்த விபரீத முடிவு!

ஆந்திரா மாநிலத்தில் கர்னூல் என்ற மாவட்டம் அமைந்துள்ளது. இதற்குட்பட்ட மிதுதுரு மண்டலத்தில் சுங்கேசுலா என்ற கிராமத்தில் ஜெகதீஷ் குமார் என்பவர் வசித்து வந்தார். இவர் 10 ஆண்டுகளுக்கு முன்னர் சரம்மா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியினருக்கு தொடர்ச்சியாக 3 பெண் குழந்தைகள் பிறந்தன.
தலைமுறைகள் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்காக ஒரு ஆண்குழந்தை பிறக்கவில்லையே என்று சரம்மா மிகவும் வருத்தப்பட்டு வந்தார். இது அவரை மன அழுத்தத்திற்கு கொண்டு சென்றது. மாதவிடாய் சுழற்சி காலத்தில் சரம்மா மிகுந்த வயிற்று வலியுடன் அவதிப்பட்டு வருவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். மேற்கூறப்பட்ட இரு காரணங்களினால் அவருக்கு வாழப்பிடிக்காமல் போனது.
இதனால் சில நாட்களுக்கு முன்னர் யாரும் இல்லாத நேரத்தில் சரம்மா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டெடுக்க முயற்சித்தனர். ஆனால் அதற்குள் சரம்மா இறந்துவிட்டார். தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது சுங்கேசுலா கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.