உலகை ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் மனிதர்களால் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட வைரஸ் என்றும் அது இயற்கையாக உருவானது இல்லை என்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் மனிதர்கள் உருவாக்கியது..! நிதின் கட்கரி வெளியிட்ட பகீர் தகவல்!

என்டிடிவி தொலைக்காட்சிக்கு நிதின் கட்கரி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, கொரோனா வைரசுடன் நாம் வாழப் பழக வேண்டும். ஏனென்றால் இந்த வைரஸ் இயற்கையாக உருவானது இல்லை. கொரோனா வைரஸ் மனிதர்களால் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது உலக நாடுகள் அனைத்துமே கொரோனாவிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் ஆய்வில் ஈடுபட்டுள்ளன.
தற்போதைக்கு கொரோனாவிற்கு தடுப்பூசி இல்லை. ஆனால் கூடிய விரைவில் தடுப்பூசி கிடைத்துவிடும் என்று கூறப்படுகிறது. இரண்டாவது மிகப்பெரிய பிரச்சனை, இந்த வைரஸ் தாக்குதலை கண்டுபிடிப்பது. வைரஸ் தாக்குதலை கண்டுபிடிப்பதில் சிக்கல் உள்ளது. ஏனென்றால் இந்த வைரஸ் மனிதனால் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் மனிதர்களால் உருவாக்கப்பட்டது. எதிர்பாராத ஒன்று நிகழ்ந்துள்ளது. உலகம் அதனை சமாளிக்க தயாராகியுள்ளது. நாமும் அவ்வாறே தயாராக வேண்டும். இவ்வாறு நிதின் கட்கரி கூறியுள்ளார். கொரோனா வைஸ் சீனாவின் மாமிசச் சந்தையில் உருவானது என்று சந்தேகம் உள்ளது. அதே சமயம் அமெரிக்கா கொரோனா வைரஸ் சீனாவின் வூகான் ஆய்வகத்தில் உருவானது என்று கூறி வந்தது.
தற்போது இந்தியாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களின் மூத்தவரான நிதின் கட்கரி, கொரோனா மனிதர்களால் உருவாக்கப்பட்டது என்று கூறியிருப்பது சர்வதேச அளவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.