நோயாளியின் ஒரே ஒரு தும்மல்..! 8 மீட்டர் வரை பறந்து செல்லும் கொரோனா வைரஸ்..! ஆய்வாளர்களின் அதிர்ச்சி கண்டுபிடிப்பு!

கொரனா வைரசால் பாதிக்கப்பட்டவர் தும்பினால் அந்த வைரஸ் சுமார் 8 மீட்டர் வரை பரவும் என தற்போதைய ஆற்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.


கொரனா உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில் அதில் இருந்து எப்படியாவது மக்களை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக மருந்து கண்டுபிடிக்க உலகம் முழுவதும் மருத்துவர்கள் தீவிரமாக ஆராய்ச்சி செய்து வருகின்றனர். குறைந்த பட்சம் அந்த வைரஸ் பரவாமல் இருக்க தடுப்பூசியாவது கண்டுபிடிக்க முடியுமா என்று ஆராய்ச்சி செய்து வருகின்றனர். அதற்காகத்தான் கொரனா சமூக பரவலை தடுக்க பொதுமக்கள் தனிமைப்படுத்திக்கொள்ளுமாறும் தெரிவித்துள்ளது.

மேலும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்குமாறும் அடிக்கடி கைகளை சோப்பால் கழுவுமாறும் உலக சுகாதார அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க கடைக்குச் சென்றாலும் குறைந்த பட்சம் ஒருமீட்டர் இடைவெளியாவது விட்டு நிற்குமாறும் உள்ளூர் சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. இந்நிலையில் மா.ச.சு. செட்ஸ் நிறுவன இணைப் பேராசிரியர் லிடியா புரூய்யா ஆய்வு ஒன்று மேற்கொண்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் கொரோனா பரவலை தடுக்க உலக சுகாதார அமைப்பின் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு போதுமானதாக இருக்காது. கொரனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இரும்பினாலும், தும்மினாலும் வெளியேறும் எச்சிலில் உள்ள வைரஸ் கிருமிகள் காற்றில் 8 மீட்டர் வரை பரவக்கூடியவை. மேலும் இந்த வைரஸ்கள் காற்றில் பல மணிநேரங்களுக்கு தாரளமாக உயிர் வாழும் எனவும் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.