இந்திய சுதந்திர தினத்தன்று வருகிறது கொரோனாவுக்கு மருந்து! பிரபல மருத்துவர் அறிவிப்பு!

விரைவில் கொரோனாவுக்கு மருந்து அறிவிக்கப்பட இருப்பதாக ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ள விஷயம் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பிவருகிறது. இதனை, ஆகஸ்ட் 15 அன்று நரேந்திரமோடி அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது.


உலகம் முழுவதும் கொரோனாவுக்கு மருந்து கண்டறிய முடியாமல் தடுமாறும் நேரத்தில், இந்தியாவில் எப்படி மருந்து கண்டறியப்பட்டது? இதற்கு நச்சென தன்னுடைய கருத்தை பதிவு செய்திருக்கிறார் பிரபல மனநல மருத்துவரான டாக்டர் ருத்ரன்.

நல்ல நாள் பார்த்து நல்ல நேரத்தில் ஸிஸேரியன்மூலம் குழந்தையை எடுப்பது போல, முகூர்த்தம் குறித்து கொவிட்19 தொற்றுக்கு ஒரு தடுப்பு மருந்து கொண்டு வர முயல்கிறார்கள். clinical trial கூட இப்போது தான் ஆரம்பிக்கப் போகிறார்கள்! நாற்பது நாட்களில் ஊசி போட்டுக் கொள்ளலாமாம்.

மருத்துவ வரலாற்றிலேயே இப்படி ஒன்று நடந்திருக்குமா என்று தெரியவில்லை. முதலில் எலிகளுக்கும் பின்னர் மனிதருக்கும் பரிசோதித்து, அதன் பக்க விளைவுகள், பாதுகாப்புக் காலம் ஆகியவை நன்கு கண்டறிய மிகக் குறைந்த அளவு ஒரு வருடத்துக்கும் மேலாகத் தேவை. இதைக் கர்ப்பமுற்றிருக்கும் பெண்களுக்குத் தரலாமா என்றறிய இன்னும் காலம் தேவை.

இதனால் வெட்டி விளம்பரம், வாய்ச்சவடால், வாட்ஸப் முட்டாள்களுக்கு மூடநம்பிக்கை பரப்ப வாய்ப்பு தவிர வேண்டுமானால் ட்ரம்ப் தன் மட-மமதையில் மிரட்டி எல்லாவற்றையும் வாங்கினால் நம் நாட்டுக்குக் கொஞ்சம் காசு வரலாம். சில முட்டாள்கள் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டேன் என்று திமிருடன் திரிந்து தொற்று பரப்பலாம். வழக்கம் போல் தடுப்பூசி போடாதே என்று அறிவியல் தெரியாத மூடர்கள் பரப்புரை செய்யலாம்.

பரவல் அதிகமாகும் இச்சூழலில், சுயக் கட்டுப்பாடு, சுயபாதுகாப்பு ஆகியவையே உதவும். கூட்டத்தில் தள்ளி நிற்பதும், முகக்கவசம் அணிவதும், கைகளை நன்றாகக் கழுவுவதுமே இப்போதைக்கு நமக்கு உதவப்போகும் தடுப்பு மற்றும் பாதுகாப்பு என்று குறிப்பிட்டுள்ளார். டாக்டர் சொன்னா சரியாத்தான் இருக்கும்.