டெல்லி இஸ்லாம் மாநாட்டில் கலந்துகொண்டவர்களுக்கு கொரோனா..?

ஊரடங்கு அறிவிக்கப்படுவதற்கு சில நாட்கள் முன்பு, டெல்லியில் நடைபெற்ற நிசாமுதீன் தப்லீக் மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் 24 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்று டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கூறியுள்ளார்.


இந்த விவகாரத்தில், இஸ்லாமியர்களின் அசட்டை காரணமாக, அவர்களால்தான் இந்தியா முழுவதும் கொரோனா பரவியதாக இந்து மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள் இந்த விவகாரத்தில் எந்த தவறும் இல்லை என்று இஸ்லாமியர்கள் கூறுகிறார்கள். ஏனென்றால், மோடி ஊரடங்கு அறிவித்த பிறகுதான் திருப்பதி போன்ற பல்வேறு மதவழிபாடு இடங்கள் இழுத்து மூடப்பட்டன என்று இஸ்லாமியர்கள் விளக்கம் தருகின்றனர்.

 இந்த மாநாட்டில் கலந்துகொண்டவர்களில், 334 பேர் நோய் அறிகுறிகளுடன் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 700 பேர் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனனர் என்றுகூறப்படுவதுதான் இந்தியாவை மிரட்டியூள்ளது. 

இந்த கொரோனா விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அவசர கூட்டம் நடத்தி வருகிறார். நூற்றுக் கணக்கானோருக்கு கொரோனா நோய் பரவியிருப்பதால் நிசாமுதீன் மஸ்ஜித் நிர்வாகி்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

உண்மையோ, பொய்யோ, இந்த மாநாட்டில் கலந்துகொண்ட அத்தனை பேருக்கும் பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தே இல்லை என்பதுதான் உண்மை. ஏனென்றால் கொரோனாவிற்கு மதப் பாகுபாடெல்லாம் இல்லை. என்ன மதம், சாதி, இனம், நிறம் எனப்பார்த்து அது வருவதில்லை.. அனைவரும் ஒன்றாக இணைந்து எதிர்க்கவேண்டிய தருணம் இது.