கொரோனா வைரஸ் இந்த நாளில் அழியும் என்று பிரபல ஜோதிட சிறுவர் அபின்ஞா ஆனந்த் கூறியிருக்கும் வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கொரோனாவுக்கு கடைசி நாள் எது..! அதிசய ஜோதிடச் சிறுவன் குறித்த நாள்..! என்ன தெரியுமா?
கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. கிட்டத்தட்ட 1,84,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் இதுவரை உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் தொடங்கி, இத்தாலி, அமெரிக்கா, பிரிட்டன், ஸ்பெயின், வடகொரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது.
இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய கைகளை சுத்தம் செய்யாமல் பொருட்களை தொடுவதிலிருந்து வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. 26,35,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த வைரஸ் தாக்குதல் மிகவும் கொடூரமாக இருக்கக்கூடும் என்று 8 மாதங்களுக்கு முன்னதாகவே பிரபல இந்திய வம்சாவளி ஜோதிடரான அபின்ஞா ஆனந்த் கூறியிருந்தார்.
இவருடைய வயது 14. இவர் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். சென்ற ஆண்டு தொடக்கத்திலேயே கிரகநிலை ஆராய்ச்சிகளின் மூலம் ஆண்டு இறுதியில் மிகப்பெரிய அழிவு தொடங்கப்போகிறது என்று கணித்திருந்தார். அதாவது ஜோதிடத்தின் படி ஒரு ராசியில் அதிக கிரகங்கள் சேருகின்ற போது விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இவர் இந்த வைரஸ் தாக்குதல் முற்றிலும் மே மாத இறுதியில் அழிய தொடங்கும் என்று ஒரு வீடியோவில் வெளியிட்டுள்ளார். அதாவது, அடுத்த மாத இறுதியில் இந்த நோய்க்கு எதிரான மருந்து செயல்பாட்டிற்கு வரும் என்றும், அப்போதிலிருந்து இந்த நோய் தாக்கம் படிப்படியாக குறைந்துவிடும் என்றும் கூறியுள்ளார். இந்தியாவில் படிப்படியாக வைரஸ் தாக்குதல் குறைந்துவிடும் என்றும் ஏனைய நாடுகளுக்கு இந்தியா முன்னுதாரணமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
இந்த நோய் தாக்குதலால் ஏற்பட்டுள்ள பொருளாதார அழிவானத இந்த ஆண்டு இறுதியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி அடுத்த ஆண்டு நவம்பர் மாதத்தில் சீரடையும் என்றும் கூறியுள்ளார்.
இந்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது