உலக நாடுகள் அனைத்தையும் மிரட்டும் கொரோனா வைரஸ் நோய் பரவுவது எப்படி? அறிகுறி என்னென்ன? உடனே தெரிஞ்சிக்கிங்க!

உலக நாடுகளில் பெரிதளவில் அச்சுறுத்தி வரும் புதிய பயங்கரமான நோயின் அறிகுறிகள் குறித்து இந்த செய்தியில் காண்போம்.


பல ஆண்டுகளுக்கு முன்னர் சீனா நாடு "சார்ஸ்" என்னும் நோயால் அவதிப்பட்டு வந்தது. இந்த நோயை ஏற்படுத்தும் கிருமிகள் வெகு விரைவாக அண்டை நாடுகளுக்கு பரவி தாக்குதல்களை நடத்தின. இதனால் உலகில் பல நாடுகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். பின்னர் மருத்துவர்கள் இதற்கான தீர்வை கண்டுபிடித்ததன் மூலம் அந்த நோயிலிருந்து சீனா விடைபெற்றது.

ஆனால் கடந்த ஒரு மாத காலமாக சீனா நாட்டில் கொராணோ என்ற வைரஸ் பயங்கரமான தாக்குதலை நடத்தி வருகிறது. வெறும் 20 நாட்களில் அண்டை நாடுகளான தாய்லாந்து, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிலும் அடியெடுத்து வைத்துள்ளது.

சார்ஸ் மற்றும் மெர்ஸ் வைரஸ் வகையை சேர்ந்தது கொராணோ வைரஸ்‌. மிகவும் சாதாரணமான சளி மற்றும் இருமல் போன்ற அறிகுறிகளை தான் முதலில் பார்க்க இயலும். தொடக்கத்திலேயே இந்த கொராணோ வைரஸை அழிக்காமல் பின்விளைவுகள் மிகவும் மோசமாகும்.

தொடக்கத்தில் சளி, இருமல் ஆகியன ஏற்படும். பின்னர் லேசான காய்ச்சல் அல்லது 2 முதல் 7 நாட்கள் வரை வறட்டு இருமல் இருக்கும். கொராணோ வைரஸ்‌ முதன்முதலில் உடலில் நுரையீரலைத் தாக்கக்கூடும். நுரையீரலில் ஊடுருவி அழற்சியை ஏற்படுத்தும். ஜன்னி என்றழைக்கப்படும் நிமோனியா காய்ச்சலை உண்டாகும் தன்மையுடையதாகும். இறுதியில் சிறுநீரகம் செயலிழந்து உயிரிழக்க பாதிப்பு நேரிடும்.

கொராணோ வைரஸ் சார்ஸ் மற்றும் மெர்ஸ் வகையை சேர்ந்தது என்பதால், எளிதில் காற்றில் பரவும் தன்மை உடையது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மூச்சு விடும் போது அல்லது தும்மல், இருமல் ஏற்படும்போது இந்த நோய்த்தொற்று ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் நிறைய உள்ளதாக மருத்துவர்கள் கவலைப்படுகின்றனர்.

இந்த நோயானது உலகின் பல நாடுகளில் பெரிதளவில் அச்சுறுத்தி வருகிறது.