கொரோனா நோயின் சமூகத் தொற்று ஆரம்ப நிலை இந்தியாவில் துவங்கியது..! அம்பலமான மத்திய அரசின் ரகசிய ஆவணம்!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் சமூக பரவலின் நிலையை அடைந்துவிட்டதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருப்பது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.


கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. கிட்டத்தட்ட 33,500-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் இதுவரை உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் தொடங்கி, இத்தாலி, வடகொரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய கைகளை சுத்தம் செய்யாமல் பொருட்களை தொடுவதிலிருந்து வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. 7,20,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த வைரஸ் தாக்குதலானது 4 கட்டங்களில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.  வெளிநாடுகளிலிருந்து கொரோனா தொற்றோடு வருபவர்கள் முதற்கட்டத்தை சேர்ந்தவர்கள். இவர்களின் மூலம் உள்ளூர் மக்களுக்கு பரவினால் அது 2-வது கட்டத்தை குறிக்கும்.

வெளிநாடுகளுக்கு செல்லாதவர்களும், இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் சுற்றுப்புறங்களில் இல்லாதவர்களுக்கும் நோய் ஏற்பட தொடங்கினால் அது 3-வது நிலையை குறிக்கும். இதுதான் சமூக பரவல் என்று அழைக்கப்படுகின்றது. சமூகப் பரவலின் அடுத்தகட்டமாக 4-வது நிலை பார்க்கப்படுகிறது. அதாவது யாரிடமிருந்து தொற்று ஏற்பட்டது எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பதை கண்டறிய இயலாத வகையில் மோசமாக அந்த நிலை அமைந்திருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த நோயின் பரவலை கட்டுப்படுத்துவதற்காகவே பல வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதாவது இந்தியாவில் தற்போது சமூக பரவலின் தொடக்கம் ஏற்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 6 மாநிலங்களில் பாதிக்கப்பட்டவர்கள் யாரிடமிருந்து நோய்த்தொற்றை பெற்றார்கள் என்பதை கண்டுபிடிப்பதற்கே இயலாத சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சந்தேகப்படும் நபர்களை நிச்சயமாக தனிமைப்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. நம் நாட்டில் பிப்ரவரி மாதத்தின் இறுதியில் இந்த சமூக தொற்று தலைதூக்க தொடங்கியதாக பிரபல நுண்ணுயிரியல் துறை நிபுணர் ஒருவர் கூறியுள்ளார். எந்தக் கட்டத்தில் இருக்கின்றது என்ற வாக்கு வாதத்திற்கு செல்லாமல், எந்தக் கட்டத்தில் இருந்தாலும் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் ஆயத்தமாக வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்துள்ளார்.

இந்த தகவல்கள் நிச்சயமாக நம் நாட்டு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருப்பதாக கருதப்படுகிறது.